Homeதமிழ்நாடுமாவட்ட செய்திகள்நாசரேத்தில்புதிய இன்ஸ்பெக்டர் பதவியேற்பு

நாசரேத்தில்புதிய இன்ஸ்பெக்டர் பதவியேற்பு

நாசரேத் காவல் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டராக மீண்டும் வனசுந்தர் பதவியேற்றார்.
நாசரேத் காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய கங்கை நாதபாண்டியன் மதுரை சரகத்திற்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக தென்காசி மாவட்டம் ஊத்துமலை காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய வனசுந்தர் நாசரேத் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டு பொறுப்பேற்றார். புதிய இன்ஸ்பெக்டரை போலீஸ் சப்_ இன்ஸ்பெக்டர் சுந்தரம், சிறப்பு சப்_ இன்ஸ்பெக்டர்கள் சிதம்பரமூர்த்தி, டேவிட் கிறிஸ்துராஜ், ஐசக் மகாராஜா மற்றும் காவலர்கள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர். புதிய இன்ஸ்பெக்டராக பதவியேற்றுள்ள வனசுந்தர் ஏற்கனவே கடந்த 2014 ம் ஆண்டு நாசரேத் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
படம் விளக்கம்
நாசரேத் காவல் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டராக வனசுந்தர் பதவியேற்றார்.

Must Read