திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பகுதியில் ஆந்திராவிலிருந்து வந்த காரை ஊத்துக்கோட்டை சோதணை சாவடியில் மடக்கிய போது காரை நிறுத்தாமல் அதிவேகமாக சென்றதால் காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில் புள்ளரம்பாக்கம் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு காரை பிடிக்க உத்தரவிடப்பட்டது பூண்டி அருகே வந்து கொண்டிருந்த காரை காவலர்கள் மடக்க முயன்ற போது அங்கிருந்தும் அதிவேகத்துடன் சென்ற காரை பின்னாலையே துரத்திச் சென்று ஒரு கட்டத்திற்கு மேல் காரை வழிமறித்ததால் காரில் இருந்த இரண்டு பேர் ஆளுக்கு ஒரு திசையில் காரில் இருந்து இறங்கி வயல்வெளிக்குள் ஓடினர் இதை அடுத்து புல்லரம்பாக்கம் காவல்துறையினர் வயல்வெளிக்குள் சென்ற நபரை துரத்தி பிடித்து இழுத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் ஆந்திர மாநிலத்தில் இருந்து குட்கா கடத்தி வந்ததும் அதை சென்னை பகுதியில் விற்க காரில் எடுத்துச் சென்றபோது பிடிபட்டதும் தெரிய வந்தது இதை அடுத்து ராஜஸ்தானைச் சேர்ந்த ஜெகதீஷ் சவுத்ரி(26) என்பவரை கைது செய்து காரில் கடத்தி வந்த 390 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்து தப்பி ஓடிய ராம் என்ற நபரை புள்ளரம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
காரில் குட்கா கடத்திச் சென்ற குற்றவாளிகள் போலீசை கண்டதும் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓட்டம். வயல்வெளியில் துரத்தி பிடித்த காவல்துறையினர். 390 கிலோ குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல்
Related Posts
Add A Comment


