Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    தஞ்சாவூர் புதிய மாவட்ட வருவாய் அலுவலருக்கு விவசாயிகள் சங்கம் வாழ்த்து

    July 30, 2026

    சோளிங்கர் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்ககோரி கண்டன ஆர்ப்பாட்டம்

    July 30, 2026

    கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்

    July 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » இறுதிச்சடங்கு முடிந்த பின் ஆற்றில் குளித்த 3 பேர் பலி..
    இந்தியா

    இறுதிச்சடங்கு முடிந்த பின் ஆற்றில் குளித்த 3 பேர் பலி..

    SahabudeenBy SahabudeenSeptember 16, 2025No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    தொடர்கதையாக நிகழ்ந்த உயிரிழப்புகளால் அதிர்ச்சி

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த சனிக்கிழமை, கார் விபத்துக்கு உள்ளானதில் 7 பேர் பரிதாபமாக பலியாகினர். அவர்கள் உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்கிற்கு சென்றுவிட்டு ஹரித்துவாரில் இருந்து திரும்பியபோது, இந்த விபத்தில் சிக்கினர். கார் தடுப்புச் சுவரில் மோதி, பள்ளத்தாக்கில் நீரில் மூழ்கியதால் உயிர்ப்பலிகள் நிகழ்ந்தது.

    இந்த நிலையில் இறந்த 4 பேரின் இறுதிச் சடங்கு அவர்களின் சொந்த ஊரான பில்வாரா மாவட்டம் புலியா காலா கிராமத்தில் நேற்று நடந்தது. மயானத்தில் இறுதிச் சடங்குகள் முடிந்து இறந்தவர்களை எரியூட்டினர். பின்னர், மயானத்துக்கு வந்தவர்களில் 7 பேர் குளிப்பதற்காக அங்குள்ள ஆற்றில் இறங்கினர். அப்போது எதிர்பாராதவிதமாக அவர்கள் ஆற்றில் மூழ்கினர்.

    அக்கம்பக்கத்தில் நின்றவர்கள் உதவியுடன் 4 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். மற்ற 3 பேர் இறந்த நிலையில் பிணங்களாக மீட்கப்பட்டனர். இறந்தவர்களின் பெயர் மகேந்திர மாலி (வயது25), பர்தி சந்த்(34), மகேஷ் சர்மா (35) என்று தெரியவந்தது.

    இதையடுத்து அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. தகவல் அறிந்து மாவட்ட கலெக்டர் மற்றும் அந்த பகுதி எம்.எல்.ஏ. அங்கு விரைந்து வந்து சம்பவம் பற்றி கேட்டறிந்தனர். இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சனிப்பிணம் தனியாகப் போகாது என்று ஒரு பழமொழி சொல்வார்கள்.

    சனியன்று இறுதிச் சடங்கிற்கு சென்று திரும்பியவர்கள் விபத்தில் சிக்கி இறக்க, அவர்களின் இறு சடங்கில் பங்கேற்றவர்களும்தொடர்ச்சியாக விபத்தில் சிக்கி உயிரிழந்தது அந்த கிராம மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    Post Views: 303
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    நந்தன் நிலேகனி தலைமையில் தேர்வு சீர்திருத்தங்களுக்கான உயர்மட்டக் குழு:

    July 26, 2026

    மோடி செய்தியாளர்கள் சந்திப்பு

    July 20, 2026

    மம்தாவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!

    July 20, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (387)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.