Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ஒரு ஓட்டுக்கு ரூ.3000 … அதுவும் சத்தியம் வாங்கி.. நடிகர் ஜெய் ஆவேசம்…

    April 23, 2026

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » பெண்ணிடம் பாலியல் சீண்டல்; பைக் டாக்சி ஓட்டுநர் கைது
    இந்தியா

    பெண்ணிடம் பாலியல் சீண்டல்; பைக் டாக்சி ஓட்டுநர் கைது

    SahabudeenBy SahabudeenNovember 10, 2025No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள வில்சன் கார்டன் பகுதியில் இளம் பெண் ஒருவர் விடுதியில் தங்கி பணிப்புரிந்து வருகிறார். இந்த நிலையில், இவர் கடந்த நவம்பர் 6ம் தேதி ஒரு வேலை விஷயமாக வெளியே சென்றுள்ளார். மாலை நேரம் ஆகியுள்ளது. இதனால் அங்கிருந்து தான் தங்கியிருக்கும் விடுதிக்கு செல்ல ரேபிடோ பைக் டாக்ஸியில் செல்ல முடிவு செய்து முன்பதிவு செய்து உள்ளார். பின்னர்முன்பதிவு செய்தததை தொடர்ந்து, ரேபிடோ பைக் டாக்சி ஓட்டுநர் பிக் அப் பாயிண்டிற்கு வந்துள்ளார்.

    இதனையடுத்து ஓடிபி நம்பரை பதிவு செய்து அந்த இளம்பெண்ணை பைக்கில் ஏற்றி சென்றுள்ளார். அப்போது பைக் டாக்சி ஓட்டுநர் அந்த இளம்பெண்ணின் தொடைகளை தொட்டு அறுவறுக்கத்தக்க வகையில் செய்துள்ளார். அவருக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனை அறிந்த இளம்பெண் சற்று நகர்ந்து அமர்ந்துள்ளார். இருப்பினும் அந்த இளைஞர் அதைதான் மீண்டும் மீண்டும் செய்துள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் உடனடியாக வாகனத்தை நிறுத்த கூறியுள்ளார்.

    ஆனால், இதனை பெரிதும் பொருட்படுத்தாத பைக் டாக்சி ஓட்டிவந்த இளைஞர் வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றுள்ளார். இது அவருக்கு மேலும் மனஅழுத்தம் மற்றும் பயத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே, தனது நண்பருக்கு வாட்ஸ் அப் மூலம் மெசேஜ் செய்துள்ளார். அதில் பயணத்தின் போது பைக் டாக்சி ஓட்டுநர் செய்த சம்பவத்தை கூறியுள்ளார். இதனையடுத்து தங்கும் விடுதிக்கு வந்த இளம்பெண்ணை பைக் டாக்சிஓட்டுநர் டிராப் செய்தார். அப்போது அந்த பகுதிக்கு உடனே அவரது நண்பர் வந்துள்ளார். மேலும் பைக் டாக்சி ஓட்டுநரான இளைஞரை கண்டித்துள்ளார்.

    மேலும் தனக்கு நேர்ந்த அனுபவத்தை வீடியோவாகபதிவு செய்து, அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். அந்த பதிவில், தான் சந்தித்த கசப்பான சம்பவம் என்றும் இதனால் கடும் மன உளைச்சலை சந்தித்தாக கூறினார். மேலும் அந்த வீடியோவில், பைக் டாக்சி ஓட்டுநரின் தகவல்களையும் (வாகன பதிவு எண் உட்பட) கான்பித்து உள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தசமூகதளவாசிகள் வீடியோவை பகிர்ந்தனர். மேலும் சம்மந்தபட்ட பைக் டாக்சி ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    இதனைத் தொடர்ந்து இளம் பெண் வில்சன் கார்டன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீசார் விரைவில் விசாரணை மேற்கொண்டனர். குற்றச்சாட்டின் பேரில், பெங்களூரு உல்லால் முனியப்பா லேஅவுட் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் (28) என்ற பைக் டாக்சி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். போலீசார் கூறியதாவது “பெண்ணின் அளித்த ஆதாரங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் முக்கிய சான்றுகளாக இருக்கின்றன. குற்றவாளி மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தனர்

    Post Views: 789
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026

    திருச்செந்தூர்: வாக்கு சேகரிக்கச்சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

    April 5, 2026

    இன்ஸ்டாகிராம் பழக்கம்: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை

    March 22, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,067)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (183)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (281)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.