Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ஒரு ஓட்டுக்கு ரூ.3000 … அதுவும் சத்தியம் வாங்கி.. நடிகர் ஜெய் ஆவேசம்…

    April 23, 2026

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » 90 சதவீத எம்.எல்.ஏ.க்கள் கோடீசுவரர்கள்; குற்ற பின்புலம் கொண்டோர் 100 பேர்: பீகாரின் வெற்றிக்கு பின் பணபலமா? அதிர்ச்சி தகவல்
    இந்தியா

    90 சதவீத எம்.எல்.ஏ.க்கள் கோடீசுவரர்கள்; குற்ற பின்புலம் கொண்டோர் 100 பேர்: பீகாரின் வெற்றிக்கு பின் பணபலமா? அதிர்ச்சி தகவல்

    SahabudeenBy SahabudeenNovember 16, 2025No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    பீகார் சட்டசபை தேர்தலில் என்.டி.ஏ. கூட்டணி 202 தொகுதிகளை வென்றுள்ளது. அவற்றில், பா.ஜ.க. 89 இடங்களையும், ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களையும் வென்றுள்ளது. மத்திய மந்திரி சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 19, மத்திய மந்திரி ஜீதன் ராம் மஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 5, ராஜ்ய சபை எம்.பி. உபேந்திரா குஷ்வஹாவின் ராஷ்டீரிய லோக் மோர்ச்சா 4 இடங்களை கைப்பற்றி உள்ளன

    இதனால், சட்டசபை தேர்தலில் பெருவாரியான இடங்களை கைப்பற்றிய தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ.) ஆட்சியை மீண்டும் தக்க வைத்து கொண்டது. இந்நிலையில், ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு தேர்தல் தொடர்பான பகுப்பாய்வு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதன்படி, 243 பேரில், மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 111. அவர்களில் பெண்கள் 29 பேர் ஆவர். 84 பேர் 5 முதல் 12 வகுப்பு வரை படித்தவர்களாகவும், 7 பேர் எழுத படிக்க தெரிந்தவர்களாகவும் உள்ளனர்.

    102 எம்.எல்.ஏ.க்கள் மீது கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன. கொலை வழக்குகள் (6 பேர்), கொலை முயற்சி வழக்குகள் (19 பேர்) மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளிலும் (9 பேர்) இவர்கள் தொடர்புடையவர்களாக உள்ளனர்.

    இவர்களில், பா.ஜ.க. அதிக அளவாக, கடுமையான குற்ற வழக்குகளை கொண்ட 43 எம்.எல்.ஏ.க்களை கொண்டுள்ளது. ஐக்கிய ஜனதா தள கட்சி கடுமையான குற்ற வழக்குகளை கொண்ட 23 எம்.எல்.ஏ.க்களை கொண்டுள்ளது என ஆய்வு தெரிவிக்கின்றது.

    243 பேரில் 218 பேர் கோடீசுவரர்கள் (90 சதவீதம்). 2020-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 194 ஆக இருந்தது. கோடீசுவரர்களில், ஐக்கிய ஜனதா தளம் 78 பேருடன் முதல் இடத்திலும், பா.ஜ.க. 77 பேருடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. எம்.எல்.ஏ.க்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.2,192.93 கோடி. இதனால், இந்த தேர்தலில் பணபலம் விளையாடி இருக்க கூடும் என்று அரசியல் விமர்சகர்கள் நம்புகின்றனர்.

    இவர்களில் குமார் பிரனாய் (பா.ஜ.க. எம்.எல்.ஏ.) ரூ.170.81 கோடிக்கு சொந்தக்காரர் ஆவார்.

    மற்றொரு பா.ஜ.க. எம்.எல்.ஏ. முராரி பஸ்வான் ரூ.6.53 லட்சம் பணத்துடன் ஏழ்மையான எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

    Post Views: 283
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026

    திருச்செந்தூர்: வாக்கு சேகரிக்கச்சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

    April 5, 2026

    இன்ஸ்டாகிராம் பழக்கம்: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை

    March 22, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,067)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (183)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (281)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.