Homeதமிழ்நாடுமாவட்ட செய்திகள்சாம்பசிவபுரம் கிராமத்தில் முதல்வர் ஜோசப் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு 100 மாணவர்களுக்கு நோட்டு 500...

சாம்பசிவபுரம் கிராமத்தில் முதல்வர் ஜோசப் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு 100 மாணவர்களுக்கு நோட்டு 500 பேருக்கு அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்:-

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சாம்பசிவபுரம் கிராமத்தில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கிளைக் கழக செயலாளர்கள் ஒன்று சேர்ந்து தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் பிறந்த தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடினார்கள். விழாவிற்கு ஆற்காடு வடக்கு ஒன்றிய செயற்குழு உறுப்பினர் கே கமல்ராஜ் தலைமை தாங்கினார் சாம்பசிவபுரம் கிளை கழக செயலாளர்கள் வி.சரவணன் எஸ்.வெற்றிவேல் வி.சந்தோஷ் குமார் எஸ்.சந்துரு எம்.பிரவீன் கே.ராஜ்குமார் ஆர்.சிலம்பரசன் எம்.விஜயகுமார் வி.பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சாம்பசிவபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் சமூக தொண்டரும் காவனூர் இந்திரா நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளியின் நிர்வாகியுமான ஆர்.சேட்டு கலந்து கொண்டு 100 மாணவர்களுக்கு நோட்டு பேனா வழங்கியும், 100 மாணவர்கள் உட்பட 500 பேருக்கு அன்னதானத்தையு ம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சாம்பசிவபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜீ.சம்பத், காவனூர் இந்திரா நர்சரி பள்ளி தலைமை ஆசிரியர் எம்.கோபி எம்.ராகுல் ஆர்.வல்லரசு எம்.சத்தீஷ் எஸ்.பரத் உட்பட பொதுமக்களும் கலந்து கொண்டனர். கடைசியில் த.வெ.க கிளைச் செயலாளர் வி.சந்தோஷ் குமார் நன்றி கூறினார்.

Must Read