தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் புதிதாக சீரமைக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்கும்பகோணம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அலுவலக கட்டிட திறப்பு விழாவில், துப்புரவு பணியாளர்களுக்கு முக்கியத்துவம் அளித்து அவர்களுடன் இணைந்து குத்துவிளக்கு ஏற்றி அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர் வினோத் ரவி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.2026 சட்டமன்றத் தேர்தலில் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைந்ததை தொடர்ந்து, கும்பகோணம் தொகுதியில் வெற்றி பெற்ற வினோத் ரவி தற்போது வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.முன்னாள் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் பயன்படுத்தி வந்த சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு தற்போது மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.நிகழ்ச்சிக்குப் பிறகு பொதுமக்களை நேரில் சந்தித்த அமைச்சர், அவர்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் உணவு உற்பத்தியில் உத்திரபிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் முன்னிலை வகிக்கின்றன. அதுபோல் தமிழக டெல்டா மாவட்டங்களையும் முன்னேற்றுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் வகுத்து வருகிறோம் என்றார்.மேலும், அமைச்சராக பொறுப்பேற்று 40 நாட்கள்தான் ஆகிறது. பிற மாநிலங்களின் விவசாய முறைகள் மற்றும் மண்வள நிலை குறித்து ஆய்வு செய்து வருகிறோம். தமிழக விவசாயிகளை முன்னோடி விவசாயிகளாக உருவாக்கி, அவர்களின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில் நமது அரசு செயல்பட்டு வருகிறது. இனி வரும் காலங்களில் விவசாயிகள் நலனுக்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும், என அமைச்சர் வினோத் ரவி தெரிவித்தார்.செய்தியாளர் அ.மகேஷ்
