குடந்தை கிங்ஸ் லயன்ஸ் சங்கம்
புதிய பொறுப்பாளர்கள் பணியேற்பு விழா
குடந்தை கிங்ஸ் லயன்ஸ் சங்கத்தின் 2026–2027 ஆம் ஆண்டிற்கான புதிய பொறுப்பாளர்கள் பணியேற்பு விழா கும்பகோணம் நால்ரோட்டில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் சனிக்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது.
மாவட்டம் 3242-எப், வட்டாரம் 14-இக்கு உட்பட்ட குடந்தை கிங்ஸ் லயன்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சியில் ஏராளமான லயன்ஸ் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் லயன் கே. ரமேஷ் தலைவராகவும், லயன் என்.சி. வினோத் செயலாளராகவும், லயன் எஸ். சிவகணேஷ் பொருளாளராகவும் பதவியேற்று பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து 2026–2027 ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
மேலும் ஐ.பி.பி / எல்.சி.ஐ.எப் ஆக லயன் கே. அன்பரசன், முதல் துணைத் தலைவராக லயன் எஸ். வினோத், இரண்டாம் துணைத் தலைவராக லயன் ஹெச். பாவிக் படேல், உறுப்பினர் வளர்ச்சிக்குழு தலைவராக லயன் பி. சந்தீப்குமார் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். இயக்குநர்களாக லயன் டாக்டர் பி. விக்னேஷ் மற்றும் லயன் கே. ரவி நியமிக்கப்பட்டனர்.
அதேபோல் பொது தொடர்பாளராக லயன் எஸ். அன்பழகன், அடக்குனராக லயன் வி. பாவேஸ்குமார், முடுக்குனராக லயன் டி. குணசேகரன் உள்ளிட்டோர் பொறுப்பேற்றனர்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட முதல் துணை ஆளுநர் பி.எம்.ஜே.எப் லயன் டாக்டர் ஸ்டாலின் தலைமை தாங்கி புதிய நிர்வாகிகளுக்கு பதவிப் பதக்கங்கள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கினார். அவர் தனது உரையில், “லயன்ஸ் இயக்கம் சமூக சேவையின் அடையாளமாக விளங்குகிறது. புதிய நிர்வாகிகள் பொதுமக்களுக்கு பயனுள்ள பல சேவைத் திட்டங்களை முன்னெடுத்து சங்கத்தை மேலும் உயர்த்த வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.
விழாவில் பி.எம்.ஜே.எப் லயன் எஸ். சசிதரன், எம்.ஜே.எப் லயன் எம். நடராஜன், பி.எம்.ஜே.எப் லயன் டாக்டர் என். ராஜேந்திரன், லயன் என். சிவராமகிருஷ்ணன், எம்.ஜே.எப் லயன் எஸ். மோகன், எம்.ஜே.எப் லயன் எம். மாறன், லயன் எழிலரசி ரவி, லயன் ஏ. சரவணபெருமாள், லயன் பி. செந்தில்குமார், லயன் கே.ஆர். மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.விழா நிறைவில் சமூக நலத்திட்டங்கள், கல்வி உதவி, மருத்துவ முகாம்கள் மற்றும் இளைஞர் நலப்பணிகளை தீவிரப்படுத்த புதிய நிர்வாகிகள் உறுதியளித்தனர்.
செய்தியாளர் அ. மகேஷ்
