மூதாட்டியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்
ராணிப்பேட்டை மாவட் டம் ஆற்காடு அடுத்த அத்தித் தாங்கள் கிராம பகுதியை சேர்ந்த தக்ஷிணாமூர்த்தி (23) என்பவர் சென்னை பகுதி யில் கிடைக்கும் வேலை களை செய்து வரும் நிலை யில் அவ்வப்போது சொந்த கிராமத்திற்கு வந்து செல்வது வழக்கம்.
இந்தநிலையில் கடந்தசில தினங்களுக்கு முன்பு சொந்த கிராமத்திற்கு வந்த தக்ஷிணாமூர்த்தி மது மற்றும் கஞ்சா போதையை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது
இந்த நிலையில் கடந்த மூன்றாம் தேதி நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில் அதே கிராமத்தில் தனியாக வசித்து வரும் மூதாட்டியின்வீட்டிற்கு சென்று கதவைத் தட்டி உள்ளார் கதவு தட்டும் சத்தத்தை கேட்ட மூதாட்டி கதவை திறந்த டே போது திடீரென தட்சிணாமூர்த்தி மூதாட்டியின் வாயை பொத்தி வீட்டிற்குள்தள்ளி வீட்டின் கதவைபூட்டி உள்ளார்.
மேலும் மூதாட்டியை வலுக்கட்டாய மாக பாலியல் பலாத்காரம் செய்து தட்சி
ணாமூர்த்தி இதைப் பற்றி வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி விட்டு சென்றுள் ளார்
அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மூதாட்டி ஆற்காடு கிராமிய காவல் நிலையத்தில் நடைபெற்ற சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார் மேலும் மூதாட்டியை வாலாஜா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காககாவல் துறையினர் அனுப்பி வைத்துள்ளனர்.
அதனை தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மூதாட்டி தெரி வித்த புகாரில் குறிப்பிட்டிருந்த அங்க அடையாளங்களை வைத்து தக்ஷிணா மூர்த்தியை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் தக்ஷிணாமூர்த்தி மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதிப்படுத்தப்பட்டது
மேலும் தட்சிணாமூர்த்தி தற்போது ராணிப்பேட்டை மகளிர் காவல் நிலை யத்தில் வைத்து விசாரணையானது நடை பெற்று வருகிறது.

