Homeதமிழ்நாடுமாவட்ட செய்திகள்பாலியல் வன்முறை, போதை கலாச்சாரம், சாதி-மத வெறிக்கு எதிராக AIYF சார்பில் 1 கோடி கையெழுத்து...

பாலியல் வன்முறை, போதை கலாச்சாரம், சாதி-மத வெறிக்கு எதிராக AIYF சார்பில் 1 கோடி கையெழுத்து இயக்கம் கும்பகோணத்தில் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

பாலியல் வன்முறை, போதை கலாச்சாரம் மற்றும் சாதி–மத வெறி இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்து, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் (AIYF) சார்பில் தமிழகம் முழுவதும் கடந்த ஜூலை 5 முதல் எதிர்வரும் ஜூலை 25 வரை நடைபெற்று வரும் 1 கோடி கையெழுத்து இயக்கம், நேற்று கும்பகோணம் மகாமகக் குளம் அருகே நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு AIYF மாநகரச் செயலாளர் ஏ. முகமது ஜாபிர் தலைமை வகித்தார். இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் மாவட்டச் செயலாளர் பி. சரண்யா முதல் கையெழுத்திட்டு இயக்கத்தை தொடங்கி வைத்தார்.இதனைத் தொடர்ந்து, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்டத் தலைவர் ஆர். ராமச்சந்திரன் இயக்கத்தின் நோக்கம் குறித்து விளக்க உரையாற்றினார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், போதைப்பொருள் பழக்கம், சாதி–மத வெறி போன்ற சமூகத் தீமைகளை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.இந்த நிகழ்வில் AITUC மாநகரச் செயலாளர் கே. சரவணன், AIYF மாநகர இணைச் செயலாளர் ஆர். சக்திவேல், மாவட்ட நிர்வாகிகள் எம். வீரமணி, எம். ருத்ரேஸ்வரன், கே. கார்த்தி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் பொதுமக்கள் உற்சாகமாக கலந்து கொண்டு, சமூக நல்லிணக்கத்தையும் பாதுகாப்பான தமிழ்நாட்டையும் உருவாக்கும் நோக்கத்திற்காக கையெழுத்திட்டு தங்களது ஆதரவை பதிவு செய்தனர்.செய்தியாளர் அ.மகேஷ்

Must Read