தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகர் வார்டு எண் 4 – மேலக்காவிரி பகுதியில், பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழா தமிழ்நாடு காமராஜ் இயக்கம் சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.இதையொட்டி மேலக்காவிரி ஆட்டோ ஸ்டாண்ட் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு காமராஜ் இயக்கத் தலைவரும், கும்பகோணம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான கவிஞர் ச. ஐயப்பன் தலைமையில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.அதனைத் தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு காமராஜரின் சேவைகளையும், கல்வி வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்புகளையும் நினைவுகூர்ந்தனர்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட மீனவரணி தலைவர் சேட்டு மோகன் முன்னிலை வகித்தார். மேலும் ஆ. மகாலிங்கம், வி. பெரியசாமி, காமராஜ் இயக்க பொறுப்பாளர் பாண்டியன், ஆட்டோ ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி விழாவை சிறப்பித்தனர்.பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, சமூக நல்லிணக்கம் மற்றும் மனிதநேயத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்தது. ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கிய தமிழ்நாடு காமராஜ் இயக்கத்தின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.செய்தியாளர் அ.மகேஷ்
