Homeதமிழ்நாடுமாவட்ட செய்திகள்கல்விக்கண் திறந்த காமராஜர் பிறந்த நாள் விழா: மேலக்காவேரி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் சிறப்பாக கொண்டாட்டம்

கல்விக்கண் திறந்த காமராஜர் பிறந்த நாள் விழா: மேலக்காவேரி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் சிறப்பாக கொண்டாட்டம்

கும்பகோணம் மேலக்காவேரியில் அமைந்துள்ள காமராஜர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.விழாவையொட்டி, பள்ளி வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவப் படத்திற்கு பள்ளி ஆசிரியர்கள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, காமராஜரின் கல்விப் பணிகள், எளிமை, நேர்மை மற்றும் மாணவர்களுக்காக அவர் ஆற்றிய மகத்தான சேவைகள் குறித்து ஆசிரியர்கள் எடுத்துரைத்து மாணவர்கள் மத்தியில் பேசினர்,விழாவின் ஒரு பகுதியாக, மாணவ, மாணவிகள் காமராஜரின் உருவ ஓவியங்களை வரைந்து தங்களது கலைத்திறமையை வெளிப்படுத்தினர். மேலும், விழாவில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. முன்னதாகஇந்நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர் கே. மணிகண்டன் தலைமை தாங்கினார். ஆசிரியர் ஏ. வள்ளி மணவாளன் முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் டி. சரவணன், ஜி. இளவரசு, எஸ். மலர்விழி, பி. ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு காமராஜருக்கு புகழஞ்சலி செலுத்தினர். கல்வி வளர்ச்சிக்காக வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்புடன் உழைத்த பெருந்தலைவர் காமராஜரின் சேவைகளை மாணவர்கள் அறிந்து பின்பற்ற வேண்டும் என்ற நோக்கில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் நிறைவாக மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.செய்தியாளர் அ.மகேஷ்

Must Read