தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் 80-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருவிடைமருதூர் காவிரி ஆற்றங்கரையில் வீ த லீடர்ஸ் அமைப்பின் சார்பில் தூய்மைப் பணி மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி 15ஆம் தேதி சனிக்கிழமை காலை நடைபெற்றது. இந்த நிகழ்வைத் தொடர்ந்துஅமைப்பின் தலைமை சேவகர் கே. அண்ணாமலை (மு) ஐபிஎஸ் அறிவுறுத்தலின்படியும், தஞ்சாவூர் மாவட்ட அமைப்பு சேவகர் பண்ணைவயல் இளங்கோ ஆலோசனையின்படியும் சுற்றுச்சூழல் பணி நடைபெற்றது. காவிரி ஆற்றங்கரையில் தேங்கியிருந்த குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவைகளை சாக்கு பைகளில் சேகரித்து எடுத்துச் சென்று குப்பை கிடங்கில் போடப்பட்டது, தொடர்ந்து, ஆற்றங்கரையோரம், மற்றும் பல்வேறு தெருகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூய்மை பணியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் தேசத்தின் தூய்மை நமது பெருமை, குப்பைகளைத் தொட்டியில் போடுவோம் பூமியைக் காப்போம், பிளாஸ்டிக்கைத் தவிர்ப்போம்,நாட்டைப் பசுமையாக்குவோம், உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் மூலம் பொதுமக்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை வீ த லீடர்ஸ் அமைப்பினர் எடுத்துரைத்து பேசினர்மேலும், வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்வது நமது உரிமை, ஊரைச் சுத்தமாக வைத்துக் கொள்வது நமது கடமை, என்ற கருத்தை வலியுறுத்தி, வீடு மட்டுமின்றி சுற்றுப்புறத்தையும், நீர்நிலைகளையும் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் ம. சதீஸ்குமார், சி. ஜானகிராமன், ஆர். வாசுதேவன், சஞ்சீவி, கே. கார்த்திகேயன், வினோத், சங்கர், சரத் உள்ளிட்ட வீ த லீடர்ஸ் அமைப்பின் சேவகர்களும், திருவிடைமருதூர் நகர சேவகர்கள் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் செல்வராஜ், பி. சுகுமார், டி. அன்பழகன், எஸ். சத்தியமூர்த்தி, கே. காமராஜ், அ. சீனிவாசன், அ. அன்வர், அ. முருகன், பி. ரமேஷ், எஸ். மணிகண்டன், பாலா, ரமணி, பழனிச்சாமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர் செய்தியாளர் அ.மகேஷ்
