Homeதமிழ்நாடுமாவட்ட செய்திகள்திருவையாறு ஒளவை மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் சுதந்திர தின ஆண்டு விளையாட்டு விழா

திருவையாறு ஒளவை மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் சுதந்திர தின ஆண்டு விளையாட்டு விழா

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் உள்ள ஔவை மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் 33 ஆம் ஆண்டு சுதந்திர தின விளையாட்டு விழா நடைபெற்றது இதில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா உற்சாகமாக நடைபெற்றது.விழாவுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வை. கலியாபெருமாள் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சிவசங்கரன் முன்னிலை வகித்தார். காதிபவன் முன்னாள் மேலாளர் இரா. நெடுமாறன் தேசியக் கொடியேற்றி விழாவைத் தொடக்கி வைத்தார். பள்ளித் தலைமையாசிரியை கோகிலா வரவேற்றார்.இதையடுத்து மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன ஓட்டப்பந்தயம், கராத்தே, ஹூலா ஹூப் நடனம் உள்ளிட்ட போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளில் மாணவர்கள் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.குறிப்பாக, வண்ணமயமான ஹூலா ஹூப் வளையங்களைப் பயன்படுத்தி மாணவர்கள் இசைக்கு ஏற்ப நடனம் மற்றும் உடற்பயிற்சியை ஒருங்கிணைத்து நிகழ்த்திய நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. கராத்தே நிகழ்ச்சியிலும் மாணவர்கள் தங்களது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தினர்.பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாலக்காடு ஐஐடி கணினிப் பொறியாளர் இரஞ்சித்குமார் மற்றும் தஞ்சாவூர் மகாத்மா தொடக்கப்பள்ளித் தாளாளர் பாலதண்டாயுதபாணி ஆகியோர் பரிசுகளை வழங்கி, மாணவர்களைப் பாராட்டிப் பேசினர்.விழாவில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். விளையாட்டுப் பொறுப்பாசிரியை பிரேமலதா நன்றி கூறினார். விழாவுக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மேரி வெர்ஜினியா, தீபா, ஆரோக்கியகுளோமிஷா, வினோதினி, கலைவாணி, ஆர்த்தி, காயத்ரி, இராஜலெட்சுமி, பிரைட் ஏஞ்சல், கனிமொழி, பிரகதீஸ்வரி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.தஞ்சை மாவட்ட செய்தியாளர்அ. மகேஷ்

Must Read