Homeதமிழ்நாடுமாவட்ட செய்திகள்கும்பகோணத்தில் ஜேசிஐ கிளப் சார்பில் இளைஞர் தலைமைத்துவ தின விழா

கும்பகோணத்தில் ஜேசிஐ கிளப் சார்பில் இளைஞர் தலைமைத்துவ தின விழா

கும்பகோணம் ஜேசிஐ மகாமகம் சிட்டி கிளப் சார்பில், ஜேசிஐ வார விழாவையொட்டி இளைஞர் தலைமைத்துவம் மற்றும் குரல் தின விழா இதயா மகளிர் கலைக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது.விழாவுக்கு ஜேசிஐ கிளப் மண்டலத் தலைவர் விக்னேஷ் தலைமை வகித்தார். ஜேசிஐ மகாமகம் சிட்டி கிளப் தலைவர் அருண் பிரகாஷ் முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினராக ஜேசிஐ பயிற்சியாளர் அறிவழகன் கலந்து கொண்டு, ‘இளைஞர் தலைமைத்துவம் மற்றும் குரல்’ என்ற தலைப்பில் மாணவிகளுக்கு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் இன்றைய இளைஞர்கள் தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்வதற்கான வழிமுறைகள், தன்னம்பிக்கையுடன் செயல்படுதல், தங்களது கருத்துகளைத் தைரியமாக வெளிப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து அவர் விளக்கி பேசினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர், பொருளாளர் மோதீஸ்வரன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் வீர மணிகண்டன், சந்தீப், மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர்.செய்தியாளர் அ.மகேஷ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read