Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    விதைகள் தரமாக உள்ளதா? இருப்பு போதுமா?- வேலூரில் அமைச்சர் ர. வினோத் திடீர் ஆய்வு

    August 1, 2026

    திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த வேளாண் அமைச்சர் ர.வினோத்

    August 1, 2026

    தஞ்சையில் அரசாணை எண் 123-ஐ ரத்து செய்யக் கோரி ஓய்வு பெற்ற அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

    July 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » டி கே வி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் 75வது குடியரசு தின விழாவை விமர்சியாக கொண்டாடப்பட்டது.
    இந்தியா

    டி கே வி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் 75வது குடியரசு தின விழாவை விமர்சியாக கொண்டாடப்பட்டது.

    adminBy adminJanuary 27, 2024No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் அடுத்த தெள்ளிமேடு கிராமத்தில் உள்ள டி.கே.வி நர்சரி (மற்றும்) பிரைமரி பள்ளியில் 75வது குடியரசுதின விழாவும், 20ஆவது விளையாட்டு தினவிழாவும் வெகு விமரிசியாக கொண்டாடப்பட்டது. மேலும் இந்த
    விழாவில் பள்ளி தாளாளர் டாக்டர் விஜயகுமார் தலைமையேற்றார்.மேலும் இந்த விழாவில் செங்கல்பட்டு புனித சூசையப்பர் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியராக பணிபுரியும் மேரிபிரமிளா பாலாஜி, மற்றும் கௌரவ விருந்தினராக பாலாஜி சென்னை உதவி ஆய்வாளர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பங்குக்கொண்டு விளையாட்டு தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும் விழாவில் சிறப்பு விருந்தினர் மேரி பிரமிளா பாலாஜி கலந்தாய்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியர்களிடமிருந்து அன்புடன் பெற்றுக்கொண்டு ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி விழாவை துவக்கி வைத்தார். மேலும் மாணவ மாணவிகளின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டு மூவர்ணக் கொடிக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் கலை நிகழ்ச்சிகள், உடற்பயிற்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார். மாணவ மாணவிகளுக்கு மட்டுமின்றி, பெற்றோர்களை ஊக்குவிக்கும் வண்ணம் மியூசிக்கல் சேர் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற பெற்றோர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசுகள் வழங்கியதோடு மட்டுமல்லாமல் கூடை பந்தாட்ட வீரரான நம் சிறப்பு விருந்தினர் மேரி பிரமிளா பாலாஜி மாணவ மாணவிகளின் விளையாட்டிலும் படிப்பிலும் ஒழுக்கத்திலும் எவ்வாறு விளங்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். அதற்கு பெற்றோர்கள் எவ்வாறு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் நல்ல அறிவுரைகளையும் வழங்கினார்.மற்றும் கௌரவ விருந்தினர் பாலாஜி சென்னை உதவி ஆய்வாளர் சிறந்த கால்பந்து வீரர். இவர் மாணவ மாணவிகளுக்கு கல்வியும் விளையாட்டும் எவ்வளவு முக்கியம் என்று எடுத்துரைத்தார். மேலும் இப்பள்ளி மாணவர் மாணவியர்கள் சிறப்பாக விளங்குவதற்கும், குழந்தைகளை அனைத்து துறைகளிலும் சிறப்பாக ஊக்கி இருப்பதற்கும். இந்த பள்ளியில் செயல்படும் அனைத்து நல் உள்ளங்களுக்கும், பள்ளி தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர், துணை தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி முக்கிய நிர்வாகிகளுக்கும், கடைநிலை ஊழியர்களும், மாணவ மாணவியர்களின் பெற்றோர்கள், அனைவருக்கும் நெகழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.

    Post Views: 360
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    admin
    • Website

    Related Posts

    நந்தன் நிலேகனி தலைமையில் தேர்வு சீர்திருத்தங்களுக்கான உயர்மட்டக் குழு:

    July 26, 2026

    மோடி செய்தியாளர்கள் சந்திப்பு

    July 20, 2026

    மம்தாவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!

    July 20, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (390)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.