Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

    April 5, 2026

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » மதுரையில் திமுக வட்ட செயலாளர் படுகொலை; போலீசார் தீவிர விசாரணை
    இந்தியா

    மதுரையில் திமுக வட்ட செயலாளர் படுகொலை; போலீசார் தீவிர விசாரணை

    adminBy adminJanuary 28, 2024No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    மதுரையில் திமுக வட்ட செயலாளர் படுகொலை; போலீசார் தீவிர விசாரணை

    மதுரை எம் கே புரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் 78 வது வார்டில் திமுக வட்ட செயலாளராக இருந்து வருகிறார்.
    இந்நிலையில் இவருக்கு திமுகவில் பதவி வழங்கியது சக உறவினர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இன்று இரவு வழக்கம் போல் தனது வீட்டு திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த பொழுது திடீரென பயங்கர ஆயுதங்களுடன் வந்த ஐந்துக்கும் மேற்பட்டோர் அடங்கிய மர்ம கும்பல் திருமுருகன் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தொடர்ந்து அவரின் உடலில் பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி இருக்கின்றனர். இதனால் சம்பவ இடத்திலேயே திருமுருகன் துடிதுடித்து உயிரிழந்திருக்கிறார். உடனடியாக சம்பவம் அறிந்து விரைந்து வந்த ஜெய்ஹிந்த்புரம் போலீசார் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? உறவினர்களா அல்லது அரசியல் முன் விரோதம் ஏதேனும் இவருக்கு உள்ளதா போன்ற கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர். நள்ளிரவு நேரத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் அந்த பகுதி பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து அப்பகுதி முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Post Views: 521
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    admin
    • Website

    Related Posts

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026

    திருச்செந்தூர்: வாக்கு சேகரிக்கச்சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

    April 5, 2026

    இன்ஸ்டாகிராம் பழக்கம்: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை

    March 22, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,067)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (182)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (281)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.