Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    தஞ்சாவூர் புதிய மாவட்ட வருவாய் அலுவலருக்கு விவசாயிகள் சங்கம் வாழ்த்து

    July 30, 2026

    சோளிங்கர் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்ககோரி கண்டன ஆர்ப்பாட்டம்

    July 30, 2026

    கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்

    July 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » கூட்டணி கட்சிக்குறித்து ஏளனமாக பேசுகிறார் ஸ்டாலினுக்கு அடுத்த நிலையில் உள்ள அமைச்சர் துரை முருகன்;முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சு
    இந்தியா

    கூட்டணி கட்சிக்குறித்து ஏளனமாக பேசுகிறார் ஸ்டாலினுக்கு அடுத்த நிலையில் உள்ள அமைச்சர் துரை முருகன்;முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சு

    adminBy adminJanuary 28, 2024No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    கூட்டணி கட்சிக்குறித்து ஏளனமாக பேசுகிறார் ஸ்டாலினுக்கு அடுத்த நிலையில் உள்ள அமைச்சர் துரை முருகன்;முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சு

    கம்யூனிஸ்ட், விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் அதனை கண்டிக்காமல் கொத்தடிமையாக இருக்கிறார்கள்; முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சு

    முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 107 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பொதுக்கூட்டம் மதுரை கேகே நகர் பகுதியில் அதிமுக சார்பில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் கழக மருத்துவர் அணி இணைசெயலாளர் மருத்துவர் சரவணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

    வீட்டில் பிள்ளைகள் உதவாமல் போனாலும் தென்னம் பிள்ளைகள் உள்ளிட்ட நலதிட்டங்களை வழங்கியும், கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு பருத்திபால், ஆம்லெட் உள்ளிட்டவைகளை வழங்கி எம் ஜி ஆர் தொண்டர் என நிரூபித்துள்ளார் அதிமுக பகுதிசெயலாளர் அசோகன், தெரிந்திருந்தால் நானும் சாப்பிட்டே உங்கள் மத்தியில் பேச துவங்கி இருப்பேன் என நகைச்சுவையாக பேசினார்.

    தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜு பேசும்போது;

    நல்லவரின் பிறந்த நாள் விழா, கொடுத்து கொடுத்து சிவந்தகரம் கொண்டவர் எம்ஜிஆர்.

    சத்துணவு முதல் விதவைகளுக்கு பென்ஷன், விலையில்லா வேஷ்டி சேலைகள் என 10 ஆண்டுகள் கொடுத்து ஆட்சி நடத்தியவர் எம்ஜிஆர்.

    ஆண்களுக்கு நிகராக பெண்களால் சாதிக்க முடியும் என்பதை சாதித்து காட்டியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

    ஆனால் எம்டனுக்கு எம்டன் தற்போதை முதல்வர் ஸ்டாலின், பொய் வாக்குறுதிகளை சொல்லி இன்றைக்கு ஏமாற்றி உள்ளார்.

    மின் கட்டணம், வீட்டு வரி உயர்வு, குப்பை வரி உள்ளிட்டவைகள் காரணமாக மாதம் 10,000ரூபாய் ஒவ்வொரு குடும்பத்தின் மாத செலவு கூடியுள்ளது.

    1000ரூபாய் மகளிர் உரிமைத்தொகை தகுதி வாய்ந்தவர்களுக்கு வழங்கப்படும் என்று சொல்லி பெரும்பாலானோருக்கு கிடைக்க வில்லை.

    பொங்கல் தொகுப்பில் உருப்படியான பொருள் வழங்காமல் இருந்ததை கண்டித்தது அதிமுக பின்னரே 1000ரூபாய், கரும்பு கொடுத்தார்கள்.

    முன்பெல்லாம் மதுவை பெரியவர்கள் மட்டும்தான் குடிபார்கள், இன்றைக்கு மாணவிகள் குடிக்கிறார்கள், குறிப்பாக பள்ளிகள் முன்பு கஞ்சா மிட்டாய்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    நீட் ரத்து கையெழுத்து பெற்றது அனைத்தும் குப்பைகளுக்கு தான் சென்றுள்ளது, ஆளுநரிடம் சென்றதா என தெரியவில்லை,

    மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பெருந்திரளாக தொண்டர்கள் குவிந்தார்கள், உரிமை மீட்பு மாநாடு, திமுக இளைஞரணி மாநாட்டில் உதயநிதி பேசும்போது சீட்டு விளையாடி கொண்டிருந்தார்கள் தொண்டர்கள்.

    கண்ணியமிக்க கூட்டம் என்று சொல்லும் திமுக, மதுபானங்களை குடித்து மாநாட்டில் பங்கேற்றனர் என்பதை ஊடகங்கள் வாயிலாக காண முடிந்தது.

    அதிமுக எழுச்சி மாநாட்டில் வழங்கப்பட்ட புளியோதரை அடிப்பிடித்ததை விமர்சனம் செய்தனர், ஆனால் இளைஞரணி மாநாட்டில் முட்டைகள், இறைச்சிகளை தூக்கி கொண்டு சென்று விட்டனர். நகைச்சுவை மாநாடாக தான் நடந்துள்ளது.

    கடந்த அதிமுக ஆட்சியில் கஜா உள்ளிட்ட 3 புயல் வந்த போதும் சிறப்பாக செயல்பட்டு சுவடே இல்லாதவாறு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு மக்களை காப்பாற்றினார்.

    ஆனால் சமீபத்தில் சென்னை மற்றும் நெல்லை உள்பட தென்மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக எடுக்காமல் தவற விட்டனர்.

    அமலாக்கத்துறை சோதனையில் ஊழல் அமைச்சர்கள் கைதாகி வருகின்றனர்,

    பணம் கொடுத்து வாக்குகளை பெற்று விடலாம் என திமுக திமிராக உள்ளனர்.

    திமுக சட்டமன்ற உறுப்பினர் மகன் வீட்டில் பணிபுரியும் பட்டியலின் பெண்ணை கொத்தடிமையாக கொடுமைப்படுத்தியது குறித்து விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் வாயைகூட திறக்காமல் கூட்டணி கட்சியினரும் கொத்தடிமைகளாக திமுகவில் உள்ளனர்.

    திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியை ஏளனமாக பேசுவது தவறானது. கூட்டணி கட்சிகளை இழிவாக பேசுகிறார்கள். அதற்காகவே கம்யூனிஸ்ட் கட்சி வாயை திறக்காமல் உள்ளது.

    நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று உறுதியான பிறகு தான் தமிழகத்துக்கு 10.5% உள் ஒதுக்கீடு பெற்று தந்தார் எடப்பாடி பழனிசாமி.

    மதுரைக்கு எந்த நன்மையும் திமுக அரசு செய்யவே இல்லை, ஜல்லிக்கட்டு அரங்கத்திற்க்கு இவ்வளவு கோடி செலவு எதற்கு என்று கேள்வி எழுப்பினார்.

    நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் ஏமாற்றும் திமுக அரசுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் என்று பேசினார்.

    Post Views: 238
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    admin
    • Website

    Related Posts

    நந்தன் நிலேகனி தலைமையில் தேர்வு சீர்திருத்தங்களுக்கான உயர்மட்டக் குழு:

    July 26, 2026

    மோடி செய்தியாளர்கள் சந்திப்பு

    July 20, 2026

    மம்தாவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!

    July 20, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (387)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.