மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
திருநெல்வேலி மாவட்டம் வாகை குளத்தை சேர்ந்த தீபக் ராஜா என்பவரை மிக கொடூரமான முறையில் படு கொலை செய்த கூலி படையினரை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வண்மையாக கண்டிகிறது . மேலும் தீபக் ராஜாவை இழந்து வாடும் அவரது குடும்பதினருக்கு ஆழ்ந்த இரங்களையும் அனுதாபங்களையும் மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக தெரிவித்து கொள்கிறோம்.
தென் மாவட்டகளில் கூலி படைகளால் படு கொலைகள் கட்ட பஞ்சாயத்து போன்ற பல்வேறு குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதனால் பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன. ஆகவே பொது மக்களின் நல்ன் கருதி உடனடியாக நடவடிக்கை எடுத்து கூலி படைகளை ஓழிக்க வேண்டும் என காவல் துறையினரை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது.
எனவே – தீபக் ராஜாவை கொடூரமான முறையில் படு கொலை செய்த கூலி படைகளை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனைக்கு உள்ளாக்க பட வேண்டும் . மேலும் இது போன்ற கொடூர சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்க உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக கேட்டு கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.


