வித்யாசாகர் கல்லூரியில் மாவட்ட அளவிலான சதுரங்கப்போட்டி…! செங்கல்பட்டு மாவட்டம் வித்யாசாகர் கல்லூரியில் லோட்டஸ் மற்றும் சேலஞ்சர்ஸ் அகடாமி சார்பில் ஆண்டனி ஜோசப் மெமோரியல் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. இப் போட்டியில். 8,10 ,12, 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 320 மாணவ மாணவிகள் உற்சாகமாக பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தினார்கள் . மேலும் குழந்தைகளை ஊக்குவிக்கும் விதத்தில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் குழந்தைகளின் திறமைகள் வெளிப்பட பேசினார்கள்.மேலும் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 15 இடங்களை பிடித்த மாணவர் மாணவியர்களுக்கு சான்றிதழ்களும், பதக்கங்களும், கோப்பைகளும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பெர்னாட் ஜோசப், மைக்கேல் ஜோசப், வித்யாசாகர் கல்வி குழுமத்தின் தலைவர் விகாஸ் சுரானா மற்றும் டாக்டர் மாரிசாமி, டாக்டர் கோவிந்தராஜன், மற்றும் சௌமித்திரி பரிசுகளையும், சான்றிதழ்களையும் வாங்கினார்கள். மேலும் செங்கல்பட்டு மாவட்ட சதுரங்க கழகத்தின் தலைவர் ராஜாராம், மற்றும் புவனேஸ்வரி, மோகன் , பாலசுப்பிரமணியன் ,கே கிருஷ்ணமூர்த்தி மற்றும் சுகன்யா கண்ணன் உடனிருந்து போட்டிகளை சிறப்பாக நடத்தினார்கள். மற்றும் மாணவ மாணவியர்களின் பெற்றோர்களும், உறவினர்ளும் உடன் இருந்தனர்.
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
லோட்டஸ் மற்றும் சேலஞ்சர்ஸ் அகாடமி நடத்திய வித்யாசாகர் கல்லூரியில் மாவட்டம்அளவிலான சதுரங்கப் போட்டி
Related Posts
Add A Comment


