Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

    April 5, 2026

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » மின் கட்டணத்தை தொடர்ந்து மின்சார சேவை கட்டணங்களும் அதிரடியாக உயர்த்தப்பட்டு உள்ளன.
    இந்தியா

    மின் கட்டணத்தை தொடர்ந்து மின்சார சேவை கட்டணங்களும் அதிரடியாக உயர்த்தப்பட்டு உள்ளன.

    SahabudeenBy SahabudeenJuly 19, 2024No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    மின்சார கட்டணத்தை தொடர்ந்து மின்சார சேவை கட்டணமும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    குறிப்பாக மும்முனை இணைப்புக்கான டெபாசிட் ரூ.2 ஆயிரத்து 145 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. என்று மின்சார வாரிய அதிகாரிகள் கூறினர்.

    தமிழ்நாட்டில் வீட்டு உபயோகம், அடுக்குமாடி குடியிருப்புகள், வழிபாட்டுத்தலங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்களுக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அனைத்து வகை மின்சார பயன்பாட்டிற்கும் 4.83 சதவீதம் அதிகரிக்கிறது. இந்த மின் கட்டண உயர்வு ஜூலை 1-ந்தேதி முதலே அமலுக்கு வந்தது. மின் கட்டணத்தை தொடர்ந்து மின்சார சேவை கட்டணங்களும் அதிரடியாக உயர்த்தப்பட்டு உள்ளன.

    அதன்படி வீடுகளுக்கு ஒரு முனை மின்சார இணைப்பு வழங்க ரூ.1,020 கட்டணம் வசூலிக்கப்பட்டது.

    தற்போது இந்த கட்டணம் ரூ.1,070 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

    இதேபோல் மும்முனை மின்சார இணைப்புக்கான கட்டணம் ரூ.1,535- ல் இருந்து ரூ.1,610 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    ஒரு முனை இணைப்புக்கு மீட்டருக்கான முன்பணம் (டெபாசிட் கட்டணம்) ரூ.765-ல் இருந்து ரூ.800 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    மும்முனை இணைப்புக்கு மீட்டருக்கான டெபாசிட் கட்டணம் ரூ.2 ஆயிரத்து 45-ல் இருந்து ரூ.2 ஆயிரத்து 145 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    அதேபோல் மீட்டரை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடமாற்றம் செய்ய ஒரு முனை இணைப்புக்கு ரூ.1,020-ல் இருந்து ரூ, 1,070 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் மும்முனை இணைப்புக்கு ரூ,1,535-ல் இருந்து ரூ.1,610 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    மின்சார இணைப்புக்கான பெயர் மாற்றத்துக்கு ரூ.615-ல் இருந்து ரூ.645 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது என்று மின்சார வாரிய அதிகாரிகள் கூறினர்.

    Post Views: 293
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026

    திருச்செந்தூர்: வாக்கு சேகரிக்கச்சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

    April 5, 2026

    இன்ஸ்டாகிராம் பழக்கம்: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை

    March 22, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,067)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (182)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (281)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.