செங்கல்பட்டு மாவட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அருன்ராஜ் சந்தித்து! அதிமுக சார்பில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் மனு அளித்தார். 2018 லயன்ஸ் கிளப் சார்பில் ரூபாய் ஒன்றரை லட்சம் காஞ்சிபுரம் மாவட்டமாக இருந்தபோது நாங்கள் கொடுத்தோம். ஆனால் இப்போது காஞ்சிபுரம் மாவட்டம் இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்ட நிலையில் நாங்கள் குழந்தைகளுக்கு விளையாட்டு மைதானம் அமைக்க கோரி கொடுத்த பணமும், அரசு ஒதுக்கிய மூன்று லட்சம் பணமும், மேலும் கிடப்பில் போடப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு விளையாட்டு மைதானம் கட்டும் வேலையை மீண்டும் மறு சீராய்வு செய்து குழந்தைகள் விளையாட்டு மைதானம் அமைக்க கோரி அதிமுக சார்பில் சிட்லம்பாக்கம் ராஜேந்திரன் கிழக்கு மாவட்ட செயலாளர் முன்னிலையில் ஆட்சியர் இடத்தில் மனு அளிக்கப்பட்டது. மேலும் இது சம்பந்தமாக கடந்த மூன்று முறை மாவட்ட ஆட்சியரை சந்தித்து நாங்கள் மனு அளித்துள்ளோம். ஆனால் இதற்கான வேலையை இன்னும் தொடங்கவில்லை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த மனு அளிக்கப்பட்டபோது கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் கட்சி உறுப்பினர்களும் உடன் இருந்தனர். அது மட்டும் இன்றி.
சூனாம்பேடு மற்றும் சித்தாமூர் கிராமத்தில் விவசாய நிலங்களில் குரங்குகள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து இந்த கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் மாமரம் ,பலா மரம், தென்னை மரம், மற்றும் பல வகையான பழ மரங்கள் பயிரிடப்படுகின்றனர். இங்கு குரங்குகள் கூட்டம் அதிகம் உள்ளதால் எங்களால் பயிரிடப்பட்டு அந்தப் பலனை அனுபவிக்க முடியாமல் நாங்கள் மிகுந்த நட்டம் அடைகிறோம். என்று அதிமுக விவசாயிகள் சார்பாக ஆட்சியர் இடத்தில் மனு கொடுக்கப்பட்டு இதற்கு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும்
மறைமலை நகர் அடுத்த பேரமனூரில் சுமார் 40 ஆண்டுகளாக இங்கு பார்வையற்ற 250 பேர் இங்கு வசித்து வருகின்றனர். இந்த இடத்தில் இப்போது மேம்பாலம் அமைக்கப் இருப்பதால் இந்த இடத்தில் வசிக்கும் பொது மக்களை காலி செய்யக்கோரி அரசு வலியுறுத்துகிறது. ஆனால் இவர்களுடைய வாழ்வாதாரத்தை கருத்தில் மேற்கொண்டு வேறு இடம் மாற்றி தரும்படி மாவட்ட ஆட்சியர் இடத்தில் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வின்போது மறைமலைநகர் அம்மா பேரவை செயலாளர் எம் ஜி கே கோபி கண்ணன், மற்றும் செங்கல்பட்டு நகர செயலாளர் செந்தில், அம்மா பேரவை செயலாளர், ரவிக்குமார் நகரச் செயலாளர், தசரதன் அம்மா பேரவை செயலாளர், பாளையம் துணைச் செயலாளர் , மகளிர் அணி செயலாளர் உஷா முருகன், மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.


