Homeஇந்தியாசேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே ஜி கே வாசன் எம் பி நிதியிலிருந்து 10 லட்சம்...

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே ஜி கே வாசன் எம் பி நிதியிலிருந்து 10 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிறுத்த நிழல் கூடம் அமைக்க பூமி பூஜை செய்து பணி தொடங்கப்பட்டது

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள செம்மாண்டப்பட்டி பாலிகாடு காலனி பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிழல் கூரை இல்லாமல் பேருந்துக்காக காத்திருக்கும் பொது மக்கள் அவதிப்பட்டு வந்தனர் இதைத்தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜி கே வாசனிடம் அந்த பகுதி பொதுமக்கள் நிழல் கூரை வேண்டுமென கோரிக்கை விடுத்தனர் இந்த கோரிக்கையை ஏற்று ஜி கே வாசன் தனது எம்பி தொகுதி நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் ஒதுக்கினார் இதைத்தொடர்ந்து செம்மாண்டப்பட்டி பாலிக்காடு காலனி பகுதியில் நிழல் கூரை அமைக்கும் பணி தொடக்க விழா த மா கா மாவட்ட தொண்டரணி தலைவர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சுசீந்திர குமார் கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார். இதில் வட்டார தலைவர்கள் சேதுராமன் அபிமன்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இதில் எடப்பாடி சங்ககிரி சட்டமன்ற தொகுதி மாவட்ட தலைவர் ராஜேந்திரன் மாநில தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ரகுநந்தகுமார் துணை அமைப்பு தலைவர்கள் வக்கீல் ராஜகுரு ராஜேந்திரன் பிரபு பாக்கியராஜ் வினோத்குமார் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திருமால் முரளி கிருஷ்ணன் செந்தில் நதியா சுருளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Must Read

spot_img