Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த வேளாண் அமைச்சர் ர.வினோத்

    August 1, 2026

    தஞ்சையில் அரசாணை எண் 123-ஐ ரத்து செய்யக் கோரி ஓய்வு பெற்ற அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

    July 31, 2026

    தஞ்சாவூர் புதிய மாவட்ட வருவாய் அலுவலருக்கு விவசாயிகள் சங்கம் வாழ்த்து

    July 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » பயங்கரவாதத்திற்கு எதிரான பாரதத்தின் நீதி… ஆபரேஷன் சிந்தூர் பற்றி பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு
    இந்தியா

    பயங்கரவாதத்திற்கு எதிரான பாரதத்தின் நீதி… ஆபரேஷன் சிந்தூர் பற்றி பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு

    SahabudeenBy SahabudeenMay 12, 2025No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    காஷ்மீரில் 26 பேரை பலி கொண்ட பஹல்காம் தாக்குதலை அடுத்து, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. ஆபரேஷன் சிந்தூருக்கு பின்பு முதன்முறையாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றினார்.

    அவர் பேசும்போது, ஆபரேஷன் சிந்தூர் என்பது மக்களின் உணர்வு, மக்களின் வைராக்கியம். இதில், நாட்டின் திறன் உறுதியுடன் வெளிப்பட்டு உள்ளது. இந்தியர் ஒவ்வொருவரும் அமைதியையே விரும்புகின்றனர். புத்த பவுர்ணமியான இன்று புத்தர் வழியில் அமைதியையே இந்தியா விரும்புகிறது.

    நம்முடைய எல்லைகளை பாகிஸ்தான் தாக்கியது. ஆனால், நாம் பாகிஸ்தானின் இதயத்தின் மீது தாக்குதல் நடத்தினோம். பாகிஸ்தான் இனி அணு ஆயுத மிரட்டலில் ஈடுபட முடியாது. நம்மிடம் பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் கெஞ்சியது. ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே பாகிஸ்தானுடன் இனி ஒரே பேச்சு.

    பயங்கரவாதிகளின் விஷயத்தின் இனி துளியும் சமரசம் இல்லை. இது போருக்கான காலமும் அல்ல. பயங்கரவாதத்திற்கான காலமும் அல்ல. இந்த பதிலடி பயங்கரவாதிகள் மட்டுமின்றி,, பயங்கரவாதிகளின் ஆதரவாளர்களுக்கும்தான். பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு ஒரு நாள் பாகிஸ்தானையே அழித்து விடும். பயங்கரவாதிகளை ஆதரிக்கும் அரசும், எதிர்க்கும் அரசும் ஒன்றாக செயல்பட முடியாது.

    ஆபரேஷன் சிந்தூர் என்பது ஆரம்பம் மட்டுமே. தேசத்திற்கே முதலிடம் என்ற கொள்கையின்படி, பயங்கரவாத முகாம்களை நாம் நொறுக்கினோம். பாகிஸ்தானின் பஹல்பூரும், முரிக்கேயும் பயங்கரவாதத்தின் பல்கலைக்கழகங்கள்.

    பாகிஸ்தானின் டிரோன்களை தூள் தூளாக்கினோம். நமது ஒற்றுமையே நம்முடைய மிக பெரிய வலிமையாகும்.

    பயங்கரவாதமும், வர்த்தகமும் ஒரே நேரத்தில் செயல்பட முடியாது.

    பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்க இயலாது. இனிமேல் அவர்கள் அத்துமீறினால் முகத்திலேயே குத்துவோம்.

    பயங்கரவாதத்திற்கு எதிரான பாரதத்தின் நீதி இது. நீதி நிலைநாட்டப்பட்டு உள்ளது என் கூறியுள்ளார்.

    Post Views: 191
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    நந்தன் நிலேகனி தலைமையில் தேர்வு சீர்திருத்தங்களுக்கான உயர்மட்டக் குழு:

    July 26, 2026

    மோடி செய்தியாளர்கள் சந்திப்பு

    July 20, 2026

    மம்தாவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!

    July 20, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (389)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.