Author: admin

இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே கடந்த சில காலமாகவே மோதல் நிலவி வருகிறது. பிரதமர் மோடி குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் கூறிய சில சர்ச்சை கருத்துகளே இந்த மோதலுக்குக் காரணமாகும். இந்த விவகாரத்தையடுத்து மாலத்தீவை புறக்கணிக்க வேண்டும் என்று கூட இந்தியாவில் குரல்கள் எழுந்தன. இதற்கிடையே இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் இப்போது மேலும் சிக்கலானதாக மாறியிருக்கிறது. கெடு விதித்த மாலத்தீவு அரசு: வரும் மார்ச் 15ஆம் தேதிக்குள் இந்திய அரசு மாலத்தீவில் உள்ள தனது ராணுவத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று மாலத்தீவு அதிபர் மொஹமட் முய்ஸு கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த சில நாட்களாகவே இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மோசமாகப் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மாலத்தீவு அதிபர் தரப்பில் இந்த வேண்டுகோளைப் பிறப்பித்துள்ளனர். கடந்தாண்டு நடந்த மாலத்தீவு தேர்தல் பிரசாரத்தின் போதே முய்ஸு, இந்தியாவுடனான உறவுகளைக் குறைப்பேன் என்றும் சீனாவுடனான உறவை மேம்படுத்துவேன் என்றும் கூறியிருந்தார். அப்போதே அவர் மாலத்தீவில் இருக்கும்…

Read More

அமெரிக்காவில் இந்தாண்டு அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் பைடன் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. அதேநேரம் எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் பலரும் களத்தில் உள்ளனர். குறிப்பாக முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர். அமெரிக்காவைப் பொறுத்தவரை அங்கே இரு கட்சிகள் மட்டுமே இருக்கும் நிலையில், உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டே வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த அதிபர் தேர்தலில் தற்போது வரை டிரம்ப் தான் முன்னிலையில் இருக்கிறார். இதற்கிடையே திங்களன்று நடந்த ஐயோவா பகுதியில் பேசிய டிரம்ப் சில சர்ச்சை கருத்துகளைக் கூறியுள்ளார். ஐயோவா பகுதியில் கடுமையான குளிர் நிலவும் நிலையில் அதைக் குறிப்பிட்டுப் பேசிய டிரம்ப், “நீங்கள் இறந்தாலும் பரவாயில்லை.. எனக்கு வாக்களித்துவிட்டு இறந்து போங்கள்.. அப்போது தான் நீங்கள் மதிப்புக்குரியவராக இருப்பீர்கள்” என்றார். மேலும், இந்தாண்டு இறுதியில் நடக்கும் அதிபர் தேர்தலில் தன்னை வெற்றி பெற…

Read More

இந்தியா மாலத்தீவு இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், மாலத்தீவில் உள்ள படைகளை வரும் மார்ச் 15ஆம் தேதிக்குள் இந்தியா திரும்பப் பெற வேண்டும் என்ற மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த சில காலமாகவே இந்தியா மாலத்தீவு இடையேயான உறவு கடுமையாகப் பாதித்துள்ள நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதற்கான காரணம் என்ன.. இப்போது இந்த அறிவிப்பு வர என்ன காரணம் என்பது குறித்து நாம் பார்க்கலாம். இந்தியா மாலத்தீவு உறவு: இப்போது மாலத்தீவில் 88 இந்திய வீரர்கள் உள்ளனர். இந்தியா மாலத்தீவு இடையே கடந்த 2010இல் போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியப் படைகள் மாலத்தீவில் நிறுத்தப்பட்டன. மருத்துவம் தொடங்கிப் பல வழிகளில் அங்குள்ள மக்களுக்கு இந்தியா உதவி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே இத்தனை ஆண்டுகளாக இருந்த நல்லுறவு கடந்த சில காலமாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு முன்பு மாலத்தீவு அதிபராக இருந்தவர் இந்தியா…

Read More

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த அதிமுக எனும் ஆயுதம் மிக முக்கியமானது என்ன மதுரையில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் பேட்டி மதுரையில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் “மதுரையில் ஜனவரி 7ஆம் தேதி எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு நடைபெறவுள்ளது, எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் மதுரையில் வெல்லட்டும் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடாக நடைபெற உள்ளது, மாநாட்டில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் அகில இந்திய தலைவர் பைசி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர், மேலும் மாநாட்டில் மும்மதத்தை சார்ந்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர், தமிழ்நாடு அரசு போக்குவத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர், போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பொங்கல் பண்டிகையை ஒட்டி போராட்டத்தை அறிவித்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாவர்கள், தமிழ்நாடு அரசு போக்குவத்து கழக தொழிலாளர்களின் கோரிக்கைகள்…

Read More

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம எச் ஜவாஹிருல்லா ச ம உ வெளியிடும் அறிக்கை தாம்பரத்தில் அமைதியான முறையில் போராடிய மக்கள் மீது காவல்துறை அராஜகம் வன்மையாக கண்டிக்கத்தக்கது மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம எச் ஜவாஹிருல்லா ச ம உ வெளியிடும் அறிக்கை தாம்பரம் சென்னை கிறிஸ்தவ கல்லூரியின் நடத்தும் சமூகக் கல்லூரியை மேயர் மற்றும் துணை மேயரின் ஒப்புதல் இல்லாமல்அத்துமீறி சீல் வைத்துடன் இது குறித்து மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய மனிதநேய மக்கள் கட்சியின் துணைபு பொதுச் செயலாளர் எம் யாக்கூபை ஒருமையில் திட்டிய மாநகராட்சி ஆணையாளர் அழகு மீனாவை கண்டித்து இன்று மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தோழமை கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் தாம்பரத்தில் நடைபெற்றது. அமைதியான முறையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் வஞ்சக நெஞ்சத்துடன் காவல் துணை ஆணையாளர் பவன்குமார் தலைமையில் மிக மோசமான…

Read More

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 265 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவரது திருவுருவச் சிலைக்கு அ.இ.அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் பல்வேறு தரப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோடாங்கிபட்டி பகுதியில் உள்ள மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு கரூர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட கழக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Read More

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 265 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவரது திருவுருவச் சிலைக்கு அ.இ.அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் பல்வேறு தரப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோடாங்கிபட்டி பகுதியில் உள்ள மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு கரூர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட கழக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Read More

சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 265 ஆவது பிறந்தநாள் விழா இன்று பல்வேறு இடங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்ட திமுக சார்பாக கலைஞர் அறிவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ, மேயர் கவிதா, மாநகர திமுக செயலாளர் கனகராஜ், மாவட்ட கழக துணை செயலாளர்கள் மகேஸ்வரி, கருணாதிதி , பகுதி கழக செயலாளர்கள் ராஜா, ஜோதிபாசு, குமார் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், பல்வேறு அணி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்….

Read More

வீரபாண்டிய கட்டபொம்மனின் 265 வது பிறந்த நாளை முன்னிடடு மதுரை பெரியார் பேருந்து நிலைய சந்திப்பில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், எம்.எல்.ஏ தளபதி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் கூறுகையில் “வீரபாண்டிய கட்டபொம்மன் நாடு சுதந்திரம் அடைய வேண்டுமென உணர்வோடு போராடினார், சுதந்திரப் போராட்ட தியாகிகள், தலைவர்களுக்கு கலைஞர், மு.க.ஸ்டாலின் மரியாதை கொடுத்து வருகிறார்கள், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு பாஞ்சாலங்குறிச்சியில் கோட்டை அமைத்து நிரந்தர நினைவிடம் அமைத்துக் கொடுத்தவர் கலைஞர், சென்னையில் வீரபாண்டிய கட்டபொம்மன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிலை அமைத்துக் கொடுத்திருக்கிறார், வீரபாண்டிய கட்டபொம்மனின் தியாகத்தை போற்றும் விதமாக பிறந்த நாளில் மாலை அணிவித்து மரியாதை செய்து வருகிறோம், சமுதாய மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து கொடுக்கும்” என கூறினார்

Read More

வீரபாண்டிய கட்டபொம்மனின் 265 வது பிறந்த நாளை முன்னிடடு மதுரை பெரியார் பேருந்து நிலைய சந்திப்பில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, செல்லூர் கே.ராஜூ, கே.டி.ராஜேந்திர பாலாஜி, எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா, டாக்டர் சரவணன் உள்ளிட்ட அதிமுகவினர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர், மேலும் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மலர் கிரீடமும் வைக்கப்பட்டது, பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் கே.ராஜூ கூறுகையில் “சுதந்திரப் போராட்ட தியாகிகளையும் தலைவர்களின் தியாகங்களை நினைவு வரும் வகையில் அதிமுக ஆட்சி காலத்தில் மணிமண்டபங்கள் நினைவிடங்கள் கட்டப்பட்டன, ஒவ்வொருவரின் தியாகங்களை நினைவு கூறும் வகையில் முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகியோர்கள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளனர்” என கூறினார்

Read More