Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
பாலஸ்தீனத்தின் காசா முனையில் செயல்பட்டுவரும் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுக்கள் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,139 பேர் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. இதனிடையே, காசாமுனையில் உள்ள பணய கைதிகளில் 100க்கும் மேற்பட்டோரை ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. ஆனாலும், இன்னும் 129 பேர் காசாவில் பணய கைதிகளாக உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பணய கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது. அதேவேளை, காசா முனையில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் இன்று 87வது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் – ஹமாஸ் போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்துள்ளது. அதன்படி, இஸ்ரேலில் ஹமாஸ்…
ஒமியட் என்னும் அனைத்து முஸ்லிம் கல்வி நிறுவனங்களின் சங்கம் சார்பில் மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்தோம். சிறுபான்மை பள்ளிக்கூடங்கள் தொடர்பான சிறுபான்மை மொழி தேர்வுகள், சிறுபான்மை சான்றிதழ் வழங்குவது, சிறுபான்மை பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அமைச்சரிடம் முன்வைத்தோம். ஆக்கபூர்வமான பதில்களை அமைச்சர் அளித்தார். ஒமியத் அமைப்பின் இணை செயலாளர் பேராசிரியர் கமால் அப்துல் நாசர், பொருளாளர் முஹம்மது கத்தீப், நையீம், இக்பால் ஷா உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் வந்திருந்தனர். பள்ளிக்கல்வி இயக்குனரும் இச்சந்திப்பில் உடனிருந்தார்மனநிறைவான சந்திப்பு என தெரிவித்துள்ளனர்.
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் புத்தாண்டு வாழ்த்து ! மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது. புது வருடம் பிறக்கிறது என்றாலே அனைவருடைய மனதிலும் புதிய தன்னம்பிக்கை மேலோங்கும் இதுவரை சந்தித்த துன்பங்களும் துயரங்களும் புதிய வருடத்தில் நீங்காதா என்ற எதிர் பார்ப்பை உருவாக்கும். எத்தகைய சோதனைகள் வந்தாலும் தொடர்ந்து நமக்காக உழைக்கும் விவசாயிகளின் அர்ப்பனிப்பு நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலை தொழில் துறை வீழ்ச்சி உள்ளீட்ட காரணங்களால் பல இலட்சக்கணகான குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் தங்களது எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்விக்குறியுடன் காத்திருகின்றனர். முடங்கி கிடக்கும் சிறு குறு தொழில்களை மத்திய, மாநில அரசுகள் மீட்டுடெக்காமல் நாட்டின் வளர்ச்சியை முன்னெடுக்க முடியாது. ஆளும் அரசுகளின் நடவடிக்கைககளால் மட்டுமே மாற்றத்தை ஏற்ப்படுத்த முடியும்.…
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி தென் மாவட்டங்களில் தாலுகா வாரியாக நிவாரண உதவி வழங்குவதில் பெரும் குளறுபடி ஒக்கி புயலால் மரணம் அடைந்த மீனவர்களுக்கு அம்மாவின் அரசு 20 லட்சம் வழங்கியது எடப்பாடியார் மத்திய அரசை வலியுறுத்தி நிதியை பெற்றது போல் திமுக அரசும் மத்திய அரசை வலியுறுத்தி நிதியை பெற வேண்டும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி மதுரை கழக அம்மா பேரவையின் சார்பில் எடப்பாடியாரின் சார்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல் பகுதியில் பாதிப்படைந்த ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி,சேலை, கைலி, கோதுமை மாவு உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அடங்கிய 1000 பெட்டிகளை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், கழக அம்மா பேரவை செயலாளர் ஆர்.பி.உதயகுமார் அனுப்பி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே. தமிழரசன், எம் பி கருப்பையா மாநில அம்மா பேரவை நிர்வாகிகள் வெற்றிவேல், தனராஜன், மாவட்ட கழக பொருளாளர்…
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அறிக்கை. அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக நம்மை விட்டுப் பிரிந்தார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே என்கிற கொள்கை அடிப்படையில் எளியவருக்கு அதிகம்உதவிகளைச் செய்து வந்தவர். தனது விடாமுயற்சியின் காரணமாக திரைத்துறையில் படிப்படியாக வளர்ச்சி கண்டவர். திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு அதிக வாய்ப்புகளைத் தமிழ்த் துறையில் வழங்கிய அற்புதமான கலைஞர். தமிழில் மட்டுமே 150 திரைப்படங்களுக்கு மேல் நடித்தவர். நடிகர் சங்கத்தின் தலைவராகவும் மிகச் சிறப்பாக பணி செய்தவர். முத்தமிழ் அறிஞர் கலைஞர் மற்றும் காங்கிரஸின் மூத்த தலைவர் மூப்பனார் ஆகியோருடன் நெருங்கிய நட்பு பேணியவர். அரசியலில் தடம் பதித்து 1996ல் சட்டமன்ற உறுப்பினரானார். கட்சி ஆரம்பித்த ஆறு ஆண்டுகளில் 2011 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக பெரும்…
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் ▪️ அன்பிற்கினிய நண்பர் கேப்டன் விஜயகாந்த் மறைவெய்திய செய்தி பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. நல்ல உள்ளத்திற்கு சொந்தக்காரரான அவர் திரையுலகிலும் பொதுவாழ்விலும் தனது கடும் உழைப்பினால் வெற்றிகரமான முத்திரைகளைப் பதித்த சாதனையாளர். ▪️ நடிகராக, நடிகர் சங்கத் தலைவராக, அரசியல் கட்சித் தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக அவர் ஏற்றுக்கொண்ட பணி எதுவாக இருந்தாலும் அதில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தன்னைச் சார்ந்த அனைவருக்கும் உறுதுணையாக இருந்தவர். குடும்ப நண்பராக என்னிடம் பழகியவர். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மீது என்றென்றும் தனிப்பாசம் கொண்டவர். ▪️ தனது திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்வுகளைத் தலைவர் கலைஞர் தலைமையில் நடத்திய தமிழ் உணர்வாளரான நண்பர் விஜயகாந்த், நடிகர் சங்கத்தலைவராக இருந்தபோது தலைவர் கலைஞர் அவர்களின் கலையுலகப் பொன்விழாவைப் பாராட்டி, திரையுலகின் சார்பில் மாபெரும் விழா எடுத்து, தங்கப் பேனாவை…
மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் திரு. வாஜ்பாய் அவர்களின் உடைய பிறந்த நாளை முன்னிட்டு மற்றும் நமது பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி ஜி ஒன்பது ஆண்டுகால சாதனை முன்னிட்டு மதுரை கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவினுடைய வாகன பேரணியானது மதுரை அடுத்துள்ள கடவூர் என்ற கிராமத்தில் இருந்து ஆரம்பித்து ஆனையூர் வரை வாகன பேரணியானது நடைபெற்றது மேலும் இந்நிகழ்ச்சியானது மதுரை கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினுடைய மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் அண்ணன் திரு. ராஜசிம்மன் ஜி அவர்களின் அறிவுறுத்தலின்படியும் மேலும் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் பேராசிரியர் அண்ணன் திரு. கதலி நரசிங்க பெருமாள் அவர்கள் முன்னிலையிலும் மற்றும் வழக்கறிஞர் பிரிவினுடைய மாநில செயலாளர் அண்ணன் திரு. அமிர்தராஜ் அவர்கள் முன்னிலையிலும் மற்றும் மதுரை பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் பிரிவினுடைய கிழக்கு மாவட்ட தலைவர் அண்ணன் திரு. பிரபாகரன் ஜி அவர்களின்…
தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் விரைவில் முழுமையாக மின் விநியோகத்தை சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் விரைந்து முடிக்க வேண்டிய பணிகள் குறித்து இன்று காலை தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மின் வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு. ராஜேஷ் லக்கானி ஐ ஏ எஸ் அவர்களுடனும், மேற்பார்வை பொறியாளர் மற்றும் செயற்பொறியாளர்களுடனும் ஆலோசனை மேற்கொண்டோம்.
நாவலூர் அருகே பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முன்னாள் காதலன் கைது: போலீஸ் விசாரணை செங்கல்பட்டு: நாவலூர் அருகே பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொன்மார் வேதகிரி நகரில் கை, கால்கள் கட்டப்பட்டு எரிந்த நிலையில் ஐடி ஊழியரான பெண் மீட்கப்பட்டார். உயிருக்கு போராடிய பெண் மருத்துவமனையில் போலீசாரால் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். கொலை செய்தது தொடர்பாக வெற்றி என்பவரை கைது செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரையை சேர்ந்த இளம்பெண் நந்தினி (28) சென்னையில் ஐ.டி.யில் பணிபுரிந்து வருகிறார். நேற்று அவரது பிறந்தநாள் என்பதால், முன்னாள் காதலன் வெற்றி கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு கூட்டி சென்றுள்ளார். பிறந்தநாள் சர்ப்ரைஸ் தருகிறேன் என்று கூறி அழைத்து சென்ற முன்னாள் காதலன், இரவில் கேளம்பாக்கம் அருகே நந்தினியை சங்கிலியால் கட்டி, கை, கால்களை அறுத்து எரித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். கொலை செய்துவிட்டு தப்பியோடிய…
உத்தரப்பிரதேசம், பீகார் மாநில மக்கள் தமிழ்நாட்டில் வந்து கழிவறை கழுவுகின்றனர் என திமுக எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் பேசிய பேச்சு “இந்தியா” கூட்டணியில் கடும் சர்ச்சையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. சனாதன தர்மத்தை ஒழிப்போம் என தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்த பேச்சை பாஜக திரித்து, சனாதன தர்மத்தை பின்பற்றுவோரை இனப்படுகொலை செய்வோம் என பேசியதாக பரப்பியது. இது வட இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. லோக்சபா தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி தலைவர்களும் உதயநிதி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து வட இந்திய மாநிலங்களை திமுக எம்பி செந்தில் குமார், கவ் மூத்ரா மாநிலங்கள் என நாடாளுமன்றத்தில் விமர்சித்தது சர்ச்சையானது. இதனை திமுக தலைமையே ரசிக்காததால் உடனே செந்தில்குமார் எம்பி மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். இந்த நிலையில் டெல்லியில் 19-ந் தேதி நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டத்தில், திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான…

