Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
அரசு வளாகத்தில் மரக்கன்றுகள் விதைத்த வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை. மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் மேலூர் வட்டார வள மைய வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் கூறுகையில் : அவ்வபோது எனது தனிப்பட்ட சேமிப்பில் மரக்கன்றுகளை வாங்கி பராமரிப்பு உறுதிமொழி பெற்று அரசு வளாகங்கள் மற்றும் அரசு பள்ளி கல்லூரிகளில் அவர்கள் கரங்களால் நட வைக்கிறேன். அந்த வகையில் மேலூர் வட்டார வள மைய அதிகாரிகள் மரங்கள் வளர்த்து பராமரிக்க ஆர்வம் காட்டினர். குடியரசு தின விழாவில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் கீதா மற்றும் அலுவலர்களிடம் மரக்கன்றுகளை வழங்கினேன். அதனை அவர்கள் ஆர்வமுடன் என் முன்னிலையிலேயே அந்த வளாகத்தில் நடவு செய்தது மன நிறைவாக இருந்தது என்றார். நிகழ்ச்சியில் மூத்த சிறப்பு பயிற்றுநர் டேனியல் தனசீலன், ஆசிரியர் பயிற்றுநர் ஜான்சன், இயற்கை ஆர்வலர்கள் ரமேஷ்குமார், சசிகுமார் மற்றும் சந்திரன்…
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த 14-ந் தேதி மணிப்பூரில் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை தொடங்கினார். இந்தநிலையில் ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை 2 நாட்கள் இடைவெளியை தொடர்ந்து மேற்கு வங்க மாநிலம் ஜல்பாய்குரி மாவட்டத்தில் இருந்து மீண்டும் தொடங்குகிறது. ராகுல்காந்தி இன்று காலை 11.30 மணிக்கு சிலிகுரியில் உள்ள பாக்தோரா விமான நிலையத்தை வந்தடைவார். அதைத் தொடர்ந்து, அவர் ஜல்பைகுரிக்குச் செல்வார் அங்கிருந்து யாத்திரையை மீண்டும் தொடங்குவார் என்று மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் சுவங்கர் சர்க்கார் கூறியுள்ளார். இந்த முறை யாத்திரை, நடைபயணம் மற்றும் பேருந்து என இருவிதங்களிலும் நடைபெறும். இன்று இரவு சிலிகுரி பகுதியில் உறக்கத்திற்காக யாத்திரை நிறுத்தப்படும் என்றார். மேலும் நாளை பீகாருக்குள் நுழைவதற்கு முன்பு உத்தர தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள இஸ்லாம்பூருக்குச் செல்லும் என அவர் கூறினார்.
அண்ணாமலை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நேற்று நடைபயணம் மேற்கொண்டார். சென்னை சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் இருந்து தனது நடைபயணத்தை தொடங்கிய அண்ணாமலை அங்கிருந்து பஸ் நிலையம் வரை நடந்து சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது வழி நெடுகிலும் தொண்டர்கள், பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பஸ் நிலையத்தில் திறந்த வேனில் நின்றவாறு தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:- உளுந்தூர்பேட்டை வளர்ச்சி இல்லாத தொகுதியாக உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு படிப்புக்கேற்ற வேலை இல்லை, வேலைக்கேற்ற ஊதியம் இல்லை. உளுந்தூர்பேட்டையில் சிப்காட் இருந்தும் வேலை இல்லாத நிலை உள்ளது. மக்களின் முன்னேற்றத்திற்காக அரசியல் இல்லை. சாமானிய மக்கள் முன்னேற வேண்டும் என்பதற்காக…
துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் இன்று முதல் 2 நாட்கள் மும்பை, புதுச்சேரி மற்றும் கடலூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முன்னதாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) மராட்டிய மாநிலம் மும்பை செல்லும் அவர், மாநில சட்டமன்றத்தில் நடைபெற உள்ள இந்திய சட்டமன்ற அமைப்புகள் தலைமை அதிகாரிகளின் 84-வது மாநாட்டு நிறைவு விழாவில் உரையாற்றுகிறார். பிற்பகலில், புதுச்சேரி பயணம் மேற்கொள்ளும் அவர், புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்களுடன் “வளர்ச்சியடைந்த பாரதம் 2047” என்ற தலைப்பில் கலந்துரையாடுகிறார்.இதைத்தொடர்ந்து நாளை (திங்கட்கிழமை) தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்துக்கு வருகை தருகிறார். பின்னர், அங்குள்ள தில்லை நடராஜர் கோவில், பாபாஜி கோவில் மற்றும் எல்லையம்மன் கோவில் ஆகிய கோவில்களில் சாமி தரிசனம் செய்கிறார்.
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் நிமோனியா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. பாகிஸ்தானில் தற்போது நிலவி வரும் கடும் குளிர் காரணமாக நிமோனியா பரவல் மேலும் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக குழந்தைகள் அதிக அளவில் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பஞ்சாப் மாகாணத்தில் கடந்த ஒரே மாதத்தில் 244 குழந்தைகள் நிமோனியா பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் பஞ்சாப் மாகாணத்தில் புதிதாக 942 பேருக்கும், லாகூரில் 212 பேருக்கும் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிமோனியா பரவலை கட்டுப்படுத்த பாகிஸ்தான் சுகாதாரத்துறை பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
டென்னிஸ் போட்டிகளில் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன. இதில், சனிக்கிழமை நடந்த ஆடவர் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா மற்றும் அவருடன் இணைந்து விளையாடிய மேத்யூ எப்டென் இணை அதிரடியாக விளையாடியது. ②लंक ② 7-6 (7/0), 7-5 नल செட் கணக்கில், எதிர்த்து விளையாடிய இத்தாலியை சேர்ந்த சிமோன் போலெல்லி மற்றும் ஆண்ட்ரி வாவஸ்சோரி இணையை வீழ்த்தி வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றது. ஆடவர் இரட்டையர் வரலாற்றில் அதிக வயதில் பட்டம் வென்றவர் (43 வயது) என்ற பெருமையை போபண்ணா பெற்றுள்ளார். இதற்கு முன் 60 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் விளையாடி, போராடி இறுதியாக, இந்த போட்டியில் வெற்றியை அடைந்துள்ளார். அவரது வெற்றி பற்றி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், உண்மையான திறமைக்கு எந்த எல்லைகளும் தெரியாது. ஆஸ்திரேலிய ஓபனில் வெற்றி பெற்ற ரோகன்…
சீமான் பேட்டி நெல்லையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; “நாடாளுமன்ற தேர்தலில் எப்போதும் யாருடனும் கூட்டணி இல்லை. என் மக்களை ரொம்ப நேசிக்கிறேன். நம்புகிறேன். நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும். நாடாளுமன்ற தேர்தலில் எந்த தொகுதியிலும் நான் போட்டியிடவில்லை. சட்டமன்ற தேர்தலில் நான் உறுதியாக போட்டியிடுவேன். நரேந்திர மோடி பிரதமராவதை தடுக்கக்கூடிய வலிமை எங்களிடம் இல்லை. ஆனால், காங்கிரஸ், பாஜகவை தமிழகத்திற்கு விட அனுமதிக்க மாட்டேன். அவர்களை எதிர்ப்பேன்.” என்றார்.
மத்திய பல்கலைக்கழக நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் நாளை புதுச்சேரி வருகிறார். இந்த நிலையில் துணை ஜனாதிபதியின் வருகையையொட்டி, புதுச்சேரியில் நாளை டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் செல்லும் சாலை, தங்கும் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்து புதுச்சேரி காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைவையொட்டி தமிழகம் முழுவதும் தேமுதிக கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. ┗लं मं ला 28.01.2024 ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் மாவட்டம், ஒன்றியம், தகரம், பகுதி, வட்டம், கிளை கழகம், கிராமங்கள் வரை உள்ள நமது தேமுதிக கழக கொடியினை ஏற்றி பட்டொளி வீசி பறக்க விட வேண்டுமென கழக நிர்வாகிகளையும், கழக தொண்டர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தியை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அவமதித்து விட்டதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், தனது பேச்சுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக கவர்னர் மாளிகை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “தேசப்பிதா மகாத்மா காந்தியை நான் அவமரியாதை செய்தேன் என்று கடந்த 3-4 நாட்களில் சில ஊடகங்கள் தவறான எண்ணத்தை உருவாக்க முயல்கின்றன. உண்மைக்கு அப்பால் எதுவும் இருக்க முடியாது. நான் மகாத்மா காந்தியை மிகவும் மதிக்கிறேன், அவருடைய போதனைகள் என் வாழ்க்கையின் லட்சியங்களாக இருந்தன. ஜனவரி 23, 2024 அன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 127வது பிறந்தநாளில் நான் பேசியதைத் தொடர்ந்து, சில ஊடகங்கள் என் பேச்சை தவறாக சித்தரித்து வெளியிட்டன. நமது தேசத்தின் சுதந்திரத்திற்கு நேதாஜியின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் போதுமான அளவு பாராட்டப்படவில்லை என்பதை எனது உரையில் விரிவாகக் கூற முயன்றேன். 1947 ஆம் ஆண்டு சுதந்திரத்தின் வேகத்தையும் செயல்முறையையும் துரிதப்படுத்தியது பிப்ரவரி 1946 இல் ராயல் இந்தியன்…

