Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:- நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வெண்மணி கிராமத்துக்குச் சென்று, ‘1968’ படுகொலையில் உயிர் பிழைத்த ஒரே நபரான ஜி. பழனிவேலை சந்தித்தேன். மீனவர்கள் வசிக்கும் நம்பியார் நகரையும், பட்டியலின சமூகத்தினர் வாழும் ஜீவா நகரையும் பார்வையிட்டேன். கிராமங்கள் முழுவதும் மோசமான வறுமை நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். இந்த துரதிருஷ்டவசமான சகோதர, சகோதரிகள் சமூக மற்றும் பொருளாதார நீதிக்காக இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டும் என ஒருவரால் வியக்க மட்டுமே முடியும்.
உத்தரபிரதேசத்தில் சுகல்தேவ் பாரதிய சமாஜ் என்ற கட்சி உள்ளது. இக்கட்சியின் தலைவராக ஓம்பிரகாஷ் ராஜ்பார் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், அம்மாநிலத்தின் சீதாபூர் மாவட்டத்தில் சுகல்தேவ் பாரதிய சமாஜ்யின் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மேடையில் ஏறி கட்சி நிர்வாகிகள் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, மேடையின் பின்புறம் திடீரென சரிந்து விழுந்தது. இதில், மேடையின் பின்புறம் நின்றுகொண்டிருந்த கட்சி நிர்வாகிகள் கீழே விழுந்தனர். இதனால், கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவத்தில் 5 பேர் காயமடைந்தனர். இதையடுத்து காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பொதுக்கூட்டத்தில் மேடை சரிந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் காங்கிரஸ் இன்று பேச்சுவார்த்தை நடத்தியது. திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 3 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்கியது. காங்கிரஸ் தரப்பில் அக்கட்சி நியமித்துள்ள தேசிய கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைப்பாளர் முகுல் வாஸ்னிக், முன்னாள் மத்திய மந்திரி சல்மான் குர்ஷித், தமிழ்நாட்டு பொறுப்பாளர் அஜோய் குமார் ஆகியோருடன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, செல்வபெருந்தகை உள்ளிட்டோர் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை கூட்டத்தில் பங்கேற்றனர். திமுக தரப்பில் டி.ஆர்.பாலு தலைமையில் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், திருச்சி சிவா உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை கூட்டத்தில் பங்கேற்றனர். இந்நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக…
பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் இணைந்து மகாகத்பந்தன் என்ற கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. ஐக்கிய ஜனதா தளம் தலைவரான நிதிஷ்குமார் மாநில முதல்-மந்திரியாகவும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்-மந்திரியாகவும் செயல்பட்டு வந்தனர். இதனிடையே, நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியை ஒருங்கிணைக்கும் பணியில் நிதிஷ்குமார் ஈடுபட்டு வந்தார். ஆனால், இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் மாநிலத்தில் கூட்டணியில் உள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகளுடன் நிதிஷ்குமாருக்கு முரண்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக இந்தியா கூட்டணியில் இருந்து விலக நிதிஷ்குமார் முடிவெடுத்தார். அதேபோல், மாநிலத்திலும் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் உள்ள கூட்டணியில் இருந்தும் விலக நிதிஷ்குமார் முடிவெடுத்தார். இந்த கூட்டணியில் இருந்து விலகி பாஜகவுடன் கூட்டணி அமைக்க நிதிஷ்குமார் திட்டமிட்டார். அதன்படி, ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகினார். பின்னர்,…
தி.மு.க.- காங்கிரஸ் இடையே நடப்பது குடும்ப பேச்சுவார்த்தை’ என்று திரிபுரா முன்னாள் முதல்-மந்திரி பிப்லப் குமார் தேப் குற்றம் சாட்டினார். சென்னை, சென்னை, தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. மாநில தலைமையகமான கமலாலயத்தில் மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தின் 2-ம் கட்ட பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திரிபுரா மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி பிப்லப் குமார் தேப் கலந்துகொண்டார் பயிற்சி முகாமில் விஸ்வகர்மா திட்டம் குறித்தும், அதனை பொதுமக்கள் மத்தியில் எடுத்து செல்வது குறித்தும், தொழில் முனைவோரை இந்த திட்டத்தில் இணைப்பது தொடர்பான அறிவுரைகளையும் பிப்லப் குமார் தேப் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிப்லப் குமார் தேப், “தமிழகத்தில் மட்டும் 3 லட்சத்து 60 ஆயிரம் மக்கள் விஸ்வகர்மா திட்டத்தில் இணைந்துள்ளனர். ஆனால் தமிழக அரசு இதனை முறையாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. மத்திய அரசின் திட்டத்திற்கு தமிழக அரசு எதிராக இருக்கிறது. தமிழகத்தில் மக்களாட்சி நடக்கவில்லை…
மக்களவைத் தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்த திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் காங்கிரசில் தேசிய அளவில் ப.சிதம்பரம் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவும், தமிழகத்தில் கே.எஸ்.அழகிரி தலைமையில் தேர்தல் குழுவும் ஏற்கனவே மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் ஆகியோருடன் தொகுதி பங்கீடு தொடர்பாக மேலிட பார்வையாளர் அஜோய் குமார் அண்மையில் ஆலோசனை நடத்தி இருந்தார். அதில், குறைந்தது 15 இடங்களையாவது கேட்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த சூழலில் அகில இந்திய காங்கிரஸ் நியமித்த தேசிய கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைப்பாளர் முகுல் வாஸ்னிக், முன்னாள் மத்திய மந்திரி சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜோய் குமார், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை ஆகியோர் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள், எம்.பி.க்கள்,…
பீகார் மாநில முதல்-மந்திரியாக இருந்த நிதிஷ் குமார், இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். பீகார் மாநில கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை நிதிஷ் குமார் வழங்கினார். அவரது ராஜினாமா கடிதத்தை கவர்னர் ஏற்றுக்கொண்டதாகவும், தொடர்ந்து பா.ஜ.க. ஆதரவுடன் நிதிஷ் குமார் இன்று மாலையே மீண்டும் முதல்- மந்திரியாக பதவியேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ‘நிதிஷ் குமார் கூட்டணியில் இருந்து விலகுவார் என்பது எங்களுக்கு ஏற்கனவே தெரியும்’ என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இது குறித்து கர்நாடக மாநிலம் கலபுராகியில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;- கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்று நிதிஷ் குமார் விரும்பியிருந்தால் இருந்திருப்பார். ஆனால் அவர் போக வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார். முன்னதாக லாலு பிரசாத் யாதவ் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோருடன் பேசியபோது, நிதிஷ் குமார் கூட்டணியில் இருந்து வெளியேற உள்ளார் என்று…
கூட்டணி கட்சிக்குறித்து ஏளனமாக பேசுகிறார் ஸ்டாலினுக்கு அடுத்த நிலையில் உள்ள அமைச்சர் துரை முருகன்;முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சு கம்யூனிஸ்ட், விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் அதனை கண்டிக்காமல் கொத்தடிமையாக இருக்கிறார்கள்; முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சு முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 107 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பொதுக்கூட்டம் மதுரை கேகே நகர் பகுதியில் அதிமுக சார்பில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் கழக மருத்துவர் அணி இணைசெயலாளர் மருத்துவர் சரவணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். வீட்டில் பிள்ளைகள் உதவாமல் போனாலும் தென்னம் பிள்ளைகள் உள்ளிட்ட நலதிட்டங்களை வழங்கியும், கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு பருத்திபால், ஆம்லெட் உள்ளிட்டவைகளை வழங்கி எம் ஜி ஆர் தொண்டர் என நிரூபித்துள்ளார் அதிமுக பகுதிசெயலாளர் அசோகன், தெரிந்திருந்தால் நானும் சாப்பிட்டே உங்கள் மத்தியில் பேச…
மதுரையில் திமுக வட்ட செயலாளர் படுகொலை; போலீசார் தீவிர விசாரணை மதுரை எம் கே புரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் 78 வது வார்டில் திமுக வட்ட செயலாளராக இருந்து வருகிறார்.இந்நிலையில் இவருக்கு திமுகவில் பதவி வழங்கியது சக உறவினர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இன்று இரவு வழக்கம் போல் தனது வீட்டு திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த பொழுது திடீரென பயங்கர ஆயுதங்களுடன் வந்த ஐந்துக்கும் மேற்பட்டோர் அடங்கிய மர்ம கும்பல் திருமுருகன் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தொடர்ந்து அவரின் உடலில் பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி இருக்கின்றனர். இதனால் சம்பவ இடத்திலேயே திருமுருகன் துடிதுடித்து உயிரிழந்திருக்கிறார். உடனடியாக சம்பவம் அறிந்து விரைந்து வந்த ஜெய்ஹிந்த்புரம் போலீசார் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? உறவினர்களா அல்லது அரசியல்…
மதுரை நாடார் பாஜன சங்க மாநாட்டில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து விமானம் மூலம் வந்த பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு மதுரை நாடார் பாஜன சங்க மாநாட்டில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து விமானம் மூலம் வந்த பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு மதுரை விமான நிலைய செய்தியாளர் சந்திப்பில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது சமீபத்தில் தமிழகத்தில் இரண்டு பிரச்சனைகள் காவிரி குறுக்கே மேகதாதனையும் முல்லைப் பெரியாறு அணையில் கேரளாவில் ஆளுநர் உரை என்பது முல்லைப் பெரியார் அணைக்கு நிகராக ஒரு புதிய அணையை கட்டுவோம் என்பது ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டிருந்தது கண்டிக்கத்தக்கது. இப்போது இருக்கும் அணை வலிமையாக உள்ளது என உச்சநீதிமன்றத்தில் அமைக்கப்பட்ட குழு ஐந்து முறை உறுதிஅளித்துள்ளது. கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு சட்டமன்றத்தில் ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது என்பது…

