Author: admin

இந்நிகழ்ச்சியில் மேலாண்மைத்துறையைச் சேர்ந்த 126 மாணவியர்களும் பங்கேற்றனர். மேலாண்மைத்துறை தலைவர் மற்றும் துணை முதல்வர் சுசிலாசங்கள் வரவேற்புரை ஆற்றினார். தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன், தலைமையேற்று தலைமையுரையாற்றினார். உபதலைவர் .கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், , பொருளாளர் .பழனியப்பன், ஆகியோர்கள் முன்னிலையுரை ஆற்றிணர்கள். கல்லூரியின் செயலாளர் .காசிபிரபு. துவக்க உரையாற்றினார். இணைச்செயலாளர் .அருண், செண்பகராஜன்,கல்லூரியின் முதல்வர் ..சித்ரா துணை முதல்வர்கள் கோமதி சரணியா உமாகாந்தி முனைவர் கிருஷ்ணவேணி ஆகியோர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். கல்லூரிச் செயலாளர் .காசிபிரபு சர்வதேச கருத்தரங்கத்தின் புத்தகத்தை வெளியிட சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக்கொண்டனர். பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் மேலாண்மைத்துறையின் முன்னால் மாணவியர்களை கவரவப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கமலாதேவி பாஸ்கரன் நிகழ்ச்சித் தலைவர் எம்பிஏ & இஎம்பிஏ அமிட்டி பிசினஸ் ஸ்கூல், அமிட்டி யுனிவர்சிட்டி துபாய், “சர்வதேச அரங்கில் வணிக இயக்கவியல் வழிசெல்லுதல்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அவர்தம் உரையில், சர்வதேச வணிகம்…

Read More

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஒன்றியம் ராயப்பன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராம பொதுப்பக்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவினை வழங்கினார்கள். இந்த மனுவில் ராயப்பன்பட்டி கிராமத்தில் 12 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் தொகை உள்ள கிராமமாக இருந்து வருகிறது என்றும் ,தங்கள் கிராமத்தில் மூன்று மேல்நிலை பள்ளிகள் மற்றும் ஒரு கல்லூரி செயல்பட்டு வருகிறது என்றும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கல்லூரியில் படிக்கும் மாணவர்களை பார்ப்பதற்காக விடுமுறை நாளிலும் பெற்றோர்கள் அதிக அளவில் ராயப்பன்பட்டிக்கு வந்து செல்லும் இடமாகவும், பேருந்து நிறுத்தம் மருத்துவமனை மற்றும் காவல் நிலையத்துக்கு தினசரி பொதுமக்கள் அதிகளவு வருகை புரியும் இடமாகவும் ராயப்பன்பட்டி கிராமம் திகழ்கிறது என்றும் ,இந்த கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 26 1 2024 அன்று குடியரசு தினத்தை முன்னிட்டு ராயப்பன்பட்டி ஊராட்சியில் சுகாதார வளாகம் கட்டுவதற்காக புதிய பூமி பூஜை தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்த…

Read More

படுகொலை செய்யப்பட்ட நபரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க கோரி மனு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேனி -அல்லிநகரம் சொக்கம்மன் தெருவினை சேர்ந்தவரும் தமிழ்நாடு வண்ணார் எழுச்சி நலப்பேரவையின் தேனி மாவட்ட செயலாளருமாகிய ஈஸ்வரி என்பவரது தலைமையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவினை வழங்கினார்கள்.மேலும் இந்த மனுவில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் பச்சை மலையான் கோட்டை பகுதியினை சேர்ந்தவர் மகாலிங்கம். இவருடன் மகாலிங்கத்தின் மனைவி , தாய் தந்தை , மற்றும் மகாலிங்கத்தின் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளதாகவும், இவர் பூ கட்டும் வேலை செய்து வரும் நிலையில் கடந்த 3.9.2023 அன்று அதே பகுதியினை சேர்ந்த ஆறு நபர்கள் மகாலிங்கத்திடம் வேலை இருப்பதாக கூறி அழைத்து சென்று அடித்து விட்டு ஓடிவிட்டதாகவும் மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த 16-9-2023 அன்று இறந்துவிட்டார் என்றும் மகாலிங்கத்தினை தாக்கிய…

Read More

பா.ஜ.க. எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; ”சங்கி’ என்ற வார்த்தையை இழிவுபடுத்தும் சொல்லாக பயன்படுத்துகின்றனர். ‘சங்கி’ என்ற ஒரு வார்த்தையை, எங்கள் கொள்கைகளுக்கு எதிராக நிற்க கூடியவர்கள், எங்களை விமர்சிக்க பயன்படுத்துகின்றனர். இந்த நாட்டை நேசிக்கும், நாட்டின் நலனில் சமரசம் செய்துக் கொள்ளாத யாராக இருந்தாலும் அவர்களை சங்கி என்று சொல்வதில் பெருமை கொள்கிறோம். தமிழகத்தில் பா.ஜனதா ஆதரவு பலமாக உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்காக நடிகர் ரஜினி, கமல், விஜய் உள்பட யாராக இருந்தாலும் ஆதரவு கேட்போம். ஆதரவு கேட்பது எங்கள் கடமை. ஆதரவு கொடுப்பது அவர்கள் விருப்பம்.” என்று கூறினார்.

Read More

தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பரபரப்பு பேச்சு நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில், இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. குறிப்பாக பா.ஜ.க., காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மக்களவை தேர்தலுக்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில் காங்கிரஸ் கட்சியின், முதல் மாநில அளவிலான கட்சி நிர்வாகிகள் கூட்டம் தெலுங்கானாவில் கடந்த 25-ம் தேதி நடைபெற்றது. இதனை தொடர்ந்து, பல மாநிலங்களில் நடக்க இருக்கும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்திற்கான தேதியை காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது. இந்நிலையில், ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் காங்கிரஸ் மாநில அளவிலான கட்சி நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் கார்கே பேசியதாவது:- மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகமும் இருக்காது, தேர்தலும் இருக்காது, சர்வாதிகாரம் மட்டுமே இருக்கும். அமலாக்கத்துறை அனைவருக்கும்…

Read More

சுற்றுச்சூழலுக்கு தீங்காக அமையும், ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் கழிவுகளை மறுபயன்பாடாக சாலை அமைக்க உபயோகிக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். உத்தரபிரதேசத்தில் பிளாஸ்டிக் சாலை அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், இதுபற்றி நேற்று ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிடும்போது, “நாட்டிலேயே முன்மாதிரியாக 813 கிலோமீட்டர் தூரத்திற்கு பிளாஸ்டிக் சாலை அமைக்கப்படுகிறது. 466 சாலைகள் இதில் அடங்கும். இந்த திட்டத்தில் தினசரி 9 கி.மீ. தூரம் சாலை அமைக்கப்பட்டு வருகிறது” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார். நாட்டிலேயே அதிக தூரத்திற்கு பிளாஸ்டிக் சாலை அமைக்கும் மாநிலமாக உத்தரபிரதேசம் முன்னணியில் உள்ளது. அதே நேரத்தில் பிளாஸ்டிக் சாலை எனும் புரட்சிக்கு வழிகாட்டிய பெருமை தமிழகத்தையே சாரும். மதுரை தியாகராஜர் கல்லூரியின் பேராசிரியர் வாசுதேவன் இந்தத் தொழில்நுட்பத்தை கண்டறிந்ததற்காக ‘இந்தியாவின் பிளாஸ்டிக் மனிதர்’ எனப் புகழப்படுகிறார். இவருக்கு மத்திய அரசு 2018-ம் ஆண்டு பத்மஸ்ரீ பட்டம் வழங்கி சிறப்பித்தது. 2002-ம் ஆண்டிலேயே…

Read More

அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட தகவலின் படி, தென் மாவட்டங்களுக்கு செல்லும் டிஎன்எஸ்டிசி பேருந்துகளும் நாளை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்கப்படும். சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 710 டிஎன்எஸ்டிசி பேருந்துகள் செல்லும்.மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து 160 டிஎன்எஸ்டிசி பேருந்துகள் இயக்கப்படும். ஏற்கனவே விரைவுப்பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும். தென் மாவட்டங்களுக்கு செல்லும் 20% பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். ஈசிஆர், பூந்தமல்லி வழியாக செல்லும் டிஎன்எஸ்டிசி பேருந்துகள் வழக்கம்போல் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும். விழுப்புரம் கோட்டத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் தாம்பரம் வரை இயக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்இடிசி ஆம்னி பேருந்துகள் ஏற்கனவே கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் நிலையில் டிஎன்எஸ்டிசி- ம் சேர்க்கப்பட்டுள்ளது.

Read More

பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சி செய்து வருகிறது. மகாகத்பந்தன் கூட்டணியில் இருந்து வந்த அவரது தலைமையிலான அரசில் தேஜஸ்வி யாதவ் துணை முதல்- மந்திரியானார். இந்த சூழலில், ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக இந்தியா கூட்டணியை ஒருங்கிணைக்கும் பணியில் நிதிஷ் ஈடுபட்டு வந்த நிலையில், பீகார் அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. சமீபத்தில் 2 நாட்களுக்கு முன் நிதிஷ், பீகார் கவர்னர் அர்லேகரை சந்தித்தது பரபரப்பாக பார்க்கப்பட்டது. இந்நிலையில், முதல்-மந்திரி பதவி ராஜினாமா, மகாகத்பந்தன் கூட்டணியில் இருந்து விலகல் என பீகார் அரசியல் நேற்று பரபரப்பு அடைந்தது. எனினும், பா.ஜ.க. ஆதரவுடன் நிதிஷ் குமார் மீண்டும் முதல்-மந்திரியாக நேற்று (ஞாயிற்று கிழமை) பொறுப்பேற்று கொண்டார். பீகாரின் முதல்-மந்திரியாக 9-வது முறையாக நிதிஷ் குமார் பொறுப்பேற்று கொண்டார். இந்த நிகழ்ச்சி நேற்று மாலை 5 மணியளவில் நடந்தது. சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் சின்ஹா ஆகிய…

Read More

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:- சூழ்ச்சி மற்றும் பொய்களின் மூலம் தங்களை தக்கவைத்துக் கொள்ள நினைக்கும் ஆதிக்கவாதிகளை மக்களிடம் அம்பலப்படுத்தி, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவது நம்முடைய வரலாற்றுக் கடமை. அதற்கான முன்னேற்பாட்டுப் பணியாக, கழக நாடாளுமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வைக்குழு சார்பில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கான பொறுப்பு அமைச்சர் மாவட்டக் கழக செயலாளர்கள், ஒன்றிய நகர பகுதி – பேரூர் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் இன்று சந்தித்து ஆலோசித்தோம். தொகுதியின் களநிலவரம், குறுகிய காலத்தில் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்து, மகத்தான வெற்றியை கழகத் தலைவர் (மு.க.ஸ்டாலின்) அவர்களிடம் சமர்ப்பிக்க அனைத்து வகையிலும் உழைத்திடுமாறு கேட்டுக்கொண்டோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read More

பாஜக ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் இன்று பீகாரின் முதல்-மந்திரியாக மீண்டும் பதவியேற்றுக்கொண்டார். அவர் 9வது முறையாக முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ளார். பாட்னாவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லோகர், முதல்-மந்திரியாக நிதிஷ்குமாருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பாஜகவை சேர்ந்த சாம்ராட் சவுதிரி, விஜய் சின்ஹா ஆகிய 2 பேரும் துணை முதல்-மந்திரிகளாக பதவியேற்றனர். இந்த விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டார். நிதிஷ்குமார் ஜி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்பியது எங்களுக்கு (பாஜகவிற்கு) மகிழ்ச்சியான விஷயம். பீகார் மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளனர். ஜேடியு மற்றும் நிதிஷ்குமாரின் உண்மையான கூட்டணி என்.டி.ஏ. மட்டுமே. இந்தியா கூட்டணி புனிதமற்ற, அறிவியலற்ற கூட்டணி; அது பலிக்காது. ‘இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை’, ‘பாரத் ஜோடோ யாத்திரை’ மற்றும் இந்தியா கூட்டணி கருத்து ரீதியாக தோல்வியடைந்துள்ளது. குடும்பம் மற்றும் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான்…

Read More