Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Sahabudeen
BREAKINGNEWS || பிரதமர் மோடி செய்தியாளர்கள் சந்திப்பு நாடாளுமன்ற கூட்டம் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும். இந்தியாவின் வளர்ச்சிக்கு தற்போதைய நாடாளுமன்ற கூட்டத் தொடர் முக்கியம். இந்தியா மிகப்பெரிய உயரங்களை அடைந்து வருகிறது. இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விண்ணுக்கு சென்றுள்ளது. விண்வெளித்துறையில் இந்தியா மிகப்பெரிய உச்சத்தை தொட்டுள்ளது. இளைஞர்களால் உருவாக்கப்படும் ஸ்டார்ட் அப்கள் சாதனைகளை படைக்கின்றன. விக்ரம் 1 ராக்கெட் திட்டம் வெற்றி இந்தியர்களுக்கு மிகப்பெரிய பெருமை. இந்தியாவின் 3வது செமிகண்டக்டர் ஆலை மிகப்பெரியதாக அமைய உள்ளது. உலகிலேயே சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் ரயிலை இந்தியா அறிமுகம் செய்துள்ளது. இது இந்தியாவில் இளைஞர்களுக்கான காலம்; 56 வயது இளைஞர் என கூறிக் கொள்பவருக்கானது இல்லை – ராகுல் காந்தி மீது பிரதமர் மோடி கிண்டல் 28 வயதே ஆன இளைஞர்கள் இணைந்து தனியார் ராக்கெட்டை ஏவியுள்ளனர். இலக்குகளை அடைவதற்கான செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய காலம்.
நீட் தேர்வு முறைகேடு. வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும், கல்வி முறையில் சீர்திருத்தம் வேண்டியும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20-ந் தேதி முதல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தினர். இந்த பேரணியின்போது கரப்பான் பூச்சி கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இருப்பினும் தடைகளை மீறி நாடாளுமன்றத்தைமுற்றுகையிட முயன்றனர்.அப்போது போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மீது தடியடி நடத்தி விரட்டியடித்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றினர்.தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜந்தர் மந்தரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லியில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர்…
விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றிச் செயல்படும் த.வெ.க. ஆட்சியில், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும் அவலங்களையும் சுட்டிக்காட்டும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இணைய ஆதரவாளர்கள் என அனைவரையும் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது Take Diversion Model த.வெ.க. அரசு.”அவதூறு வழக்குகளில் கூட எதற்குத் தொடர்பில்லாத குற்றப்பிரிவுகளைச் சேர்க்கிறீர்கள்?” என நீதிமன்றத்திடம் சமீபத்தில்தானே குட்டு வாங்கினீர்கள்?கைது செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் தனது வழக்கறிஞர் மற்றும் ஆதரவாளர்களைச் சந்திக்கக் கூட மறுக்கப்பட்டுள்ளார். அவருக்கான மருந்துகளை வழங்கச் சென்றவர்களும் தடுக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவரின் அடிப்படைச் சட்ட உரிமைகளும் மனித உரிமைகளும்கூட மறுக்கப்பட்டுள்ளன.தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா? மைதானத்தில் மாத்திரை அரைத்த அமைச்சர் மீதும்,…
திரிணாமூல் காங்கிரசின் அதிருப்தி அணியை அங்கீகரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கி ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதை ஒட்டி டெல்லியில் நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்ற நிலையில், திரிணாமூல் காங்கிரசில் இருந்து விலகி தேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைந்த 20 எம்.பி.க்களை அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் அடையாள வெளிநடப்பு செய்தனர்.
கற்பகத்தரு’ என்று அழைக்கப்படும் பனையில் இருந்து கிடைக்கப்பெறும் பதநீரை காய்ச்சி கருப்பட்டி தயாரிக்கின்றனர். பனை மரங்கள் நிறைந்த தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் தயாரிக்கப்படும் கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்றுள்ளது. இதனால்தயாரிக்கப்படும் கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்றுள்ளது. இதனால் உடன்குடி பகுதியில் பலரும் பனைத்தொழிலில் ஆர்வமுடன் ஈடுபட்டு கருப்பட்டி தயாரித்து விற்கின்றனர். பனை தொழிலாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில், பதநீரில் இருந்து தயாரிக்கப்படும் கருப்பட்டி, கற்கண்டுக்கு மத்திய அரசு ஜி.எஸ்.டி. விலக்கு அளித்துள்ளது. எனினும் அவற்றை கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யும்போது 5 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது. சீனி மூட்டைகள் விற்பனை அதிகம்ஆனால் பதநீரில் 75 சதவீதத்துக்கும் அதிகமாக சீனி கலந்து கருப்பட்டி, கற்கண்டு போன்றவை தயாரித்தால், அவற்றுக்கு 18 சதவீத வரி விதிக்கப்படுகிறது. பனை பொருட்களை சில்லறையில் விற்பனை செய்தால் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.இந்த நிலையில் தமிழகத்திலேயே உடன்குடிபகுதியில்தான் சீனி மூட்டைகளை வியாபாரிகள் அதிகளவில் கொள்முதல் செய்ததாக…
தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் மற்றும் நாடார் பேரவை சார்பாக முப்பெரும் விழா தூத்துக்குடி மாவட்ட சமத்துவக் மக்கள் கழகம் மற்றும் நாடார் பேரவையின் சார்பாக காமராஜரின் 124 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் மாலை சூடி அற்புதராஜ் தலைமையில் மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட் மாநில துணைப் பொதுச் செயலாளர் காமராசு நாடார் மாநில கலை இலக்கிய அணி செயலாளர் அந்தோணி பிச்சை நாடார் பேரவை மாவட்ட தலைவர் அருள் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் சமத்துவ தலைவர் சமத்துவ மக்கள் கழகத்தின் மாநில தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஏழை எளிய மக்கள் ஆயிரம் குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவி வழங்கி மற்றும் நமது மாவட்டத்தில் பத்தாவது 12வது வகுப்பில் முதல் இடங்களை பெற்ற மாணவ மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றினார் இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் சூலூர்…
கும்பகோணத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. மாநகர தெருவோர வியாபாரிகள் சங்க சிறப்பு பேரவைக் கூட்டம்: மாநகராட்சி நிர்வாகம் தினசரி வசூலிக்கும் கூடுதல் கட்டணத்தை ரத்து செய்து, ஆண்டுக்கு ரூ.750 மட்டும் வசூலிக்க தீர்மானம்கும்பகோணம், தெருவோர வியாபாரிகளிடம் கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம் தினசரி வசூலித்து வரும் கூடுதல் கட்டணத்தை உடனடியாக ரத்து செய்து, தெருவோர வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்தின்படி ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.750 மட்டுமே உரிமக் கட்டணமாக வசூலிக்க வேண்டும் என ஏ.ஐ.டி.யூ.சி. மாநகர தெருவோர வியாபாரிகள் சங்கத்தின் சிறப்பு பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகர பழைய பேருந்து நிலையம் காளியம்மன் கோவில் தெருவில் உள்ள ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க அலுவலகத்தில், தமிழ்நாடு தெருவோர வியாபாரிகள் சங்கத்தின் மாநகர சங்க சிறப்பு பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் தெருவோர வியாபாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் தோழர் ப. சிவக்குமார் தலைமை வகித்தார். இந்திய…
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகர் மேலக்காவேரி பெருமாண்டி தெற்கு தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மங்களாம்பிகை சமேத அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்று வரும் ஆஷாட குப்த நவராத்திரி விழாவையொட்டி, வியாழக்கிழமை மாலை ஸ்ரீ வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், புஷ்ப அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. ஸ்ரீ வராஹி அம்மன் சிறப்பு ஸ்தலமாக விளங்கும் இத்திருக்கோவிலில், கடந்த ஜூலை 15-ஆம் தேதி ஆஷாட குப்த நவராத்திரி விழா தொடங்கியது. இந்த ஆண்டு ஜூலை 23-ஆம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவின் ஒன்பது நாட்களும் துர்காதேவி, வாராஹி, மற்றும் தசமகாவித்யா தேவியரை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாட்களாக கருதப்படுகின்றன. குறிப்பாக வராஹி அம்மன் வழிபாட்டிற்கு இந்த நவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக பக்தர்கள் நம்புகின்றனர். விழா நாட்களில் தினமும் வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பல்வேறு வண்ண மலர்களால் அலங்காரம், சிறப்பு ஆராதனை மற்றும் அன்னதானம் நடைபெற்று…
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2026 திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் முதல்முறையாக டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது.அதன் ஒரு பகுதியாக, கும்பகோணத்தில் நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ர.வினோத் எம் எல் ஏ. வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில், டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் வீடு தோறும் மக்களின் விவரங்கள் துல்லியமாகவும் விரைவாகவும் பதிவு செய்யப்படுவதன் அவசியம் குறித்து விளக்கப்பட்டது. மேலும், மக்கள் கணக்கெடுப்பு பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்களிடம் அமைச்சர் வினோத் கேட்டுக்கொண்டார்.மக்கள் தொகை கணக்கெடுப்பு 2026, டிஜிட்டல் முறையில் நடைபெறுவதன் மூலம் தரவுகளின் துல்லியம், விரைவான சேகரிப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.செய்தியாளர் அ.மகேஷ்
மாட்டிறைச்சி கடைகளை மூட சொல்லி நள்ளிரவில் அராஜகம் – சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.சென்னை : திருவெற்றியூர் தாங்கள் என்கிற பகுதியில் மாட்டு இறைச்சி கடைகளை மூட சொல்லி நள்ளிரவில் பாரத் இந்து முன்னனி அமைப்பை சேர்ந்த சிவாஜி மற்றும் அவரது கூட்டாளிகள் அராஜகத்தில் ஈடு பட்ட இச்சம்பவத்தை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மிகவும் வண்மையாக கண்டிக்கிறது.தாங்கள் என்கிற பகுதியில் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மாட்டு இறைச்சி கடைகள் நடத்தி வருகின்றனர். மேலும் எத்தனையோ இந்துதுவ அமைப்பை சேர்ந்தவர்கள் அப்பகுதியில் உள்ளனர். அவர்களால் இது போன்ற பிரச்சனைகள் வரவில்லை அப்படி இருக்க திடீரென்று பாரத் இந்து முன்னனி சேர்ந்தவர்கள் இறைச்சி கடைகளை மூட சொல்லி அராஜகத்தில் ஈடு பட்டிருப்பது தான் சந்தேகம் எழுகிறது. இச்சபவத்தை சாதாரனமாக கடந்து…
