Author: Sahabudeen

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகா சுந்தரபெருமாள் கோவில் பகுதியில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் புதிய கிளை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியில் 14 உறுப்பினர்களைக் கொண்ட புதிய கிளைக் குழு அமைக்கப்பட்டு, அவர்களுக்கு அடையாள உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டன.இந்த நிகழ்வுக்கு மாதர் தேசிய சம்மேளனத்தின் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் தோழர் பா. சரண்யா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பி. தாமரைச்செல்வி சிறப்புரையாற்றி, மாதர் அமைப்புகளை வலுப்படுத்துவதன் அவசியம் குறித்தும், பெண்கள் சமூக முன்னேற்றத்தில் ஆற்ற வேண்டிய பங்கு குறித்தும் எடுத்துரைத்து பேசினார் தொடர்ந்து நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ராஜலட்சுமி பேசுகையில் பெண்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விளக்கி, அவற்றை சட்டரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து உறுப்பினர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.கூட்டத்தை விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தோழர் சுந்தர்ராஜன் வழிநடத்தினார்.இதனைத் தொடர்ந்து, புதிய கிளைக்கான கிளைத் தலைவர், துணைத் தலைவர், கிளைச்…

Read More

திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையின் பெண்கள் வார்டில் பெண் ஒருவரின் கால் விரலை எலி கடித்ததால் அவர் ஐ.சி.யுவுக்கு மாற்றப்பட்ட நிலையில், ஐ.சி.யுவிலும் எலிகள் நடமாடும் வீடியோ வெளியாகியுள்ளது. நேற்று எலி கடித்த செய்திகள் வெளியானதும் மருத்துவமனை வளாகத்தைத் தூய்மைப் படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.இந்த நிலையில்தான் உயிர்காக்கும் கருவிகளுடன், அதீத தூய்மையுடன் பராமரிக்கப்பட வேண்டிய ஐ.சி.யுவிலும் எலிகள் நடமாட்டம் உள்ளதாக நோயாளிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

Read More

தம்பி மனைவி உள்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பெருமாள்புரத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபரும், சினிமா நடிகருமான ஜி.பி.முத்துவின் வீட்டின் அருகே கோவில் கட்டுவது தொடர்பாக இரு தரப்பினரிடையே முன்விரோதம் இருந்தது. கடந்த 20-ந் தேதி நள்ளிரவில் ஜி.பி.முத்து வீட்டின் முன்பு எதிர் தரப்பினர் கோழியை அறுத்து பலி கொடுத்துப் பூஜை செய்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தட்டிக்கேட்டபோது ஏற்பட்ட மோதலில், இரும்பு கம்பி மற்றும் அரிவாளால் தாக்கியதில் ஜி.பி.முத்துவின் தம்பி மனைவி அனிதா, உறவினர் இளையபெருமாள் ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.படுகாயமடைந்த இருவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து ஜி.பி.முத்து அளித்த புகாரின்பேரில், அப்பகுதியைச் சேர்ந்த பரமசிவன், மாடசாமி, ஆத்திசெல்வம், வேம்புநாதன், முத்துகிருஷ்ணன், மகேஷ், சுந்தரவேல், சுடலையாண்டி ஆகிய 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோன்று எதிர் தரப்பை சேர்ந்த முத்து மகேஷ், சுந்தரவேல், மாடசாமி, ஆத்திசெல்வம் ஆகியோரை ஜி.பி.முத்து, அவருடைய தந்தை கணேசன்,ஜி.பி.முத்துவின்…

Read More

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே உள்ள பந்தநல்லூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் நெல் கொள்முதல் பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கி கிடப்பதுடன், பாதிக்கப்பட்ட விவசாயிகள் தலையில் முக்காடு அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டு, நெல் கொள்முதல் பணிகளை உடனடியாக மீண்டும் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.போராட்டத்தில் பேசிய விவசாயி கலைமணி, ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கி கிடப்பதாகவும், கொள்முதலுக்குத் தேவையான சாக்குப் பைகளும் போதுமான அளவில் இல்லாததால் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.அறுவடை உச்சக்கட்டத்தில் நடைபெற்று வரும் நிலையில், அரசு நெல்லை கொள்முதல் செய்யாததால் அறுவடைப் பணிகளையே நிறுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.விவசாயி கலியமூர்த்தி பேசுகையில், விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்றும்,…

Read More

கும்பகோணம் நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நெல் ஏற்றுதல் இறக்குதல் பணியில் லாரிகளுக்கு வரிசை முறையில் டோக்கன் வழங்குவதில் முறைகேடு நடைபெறுவதாக புகார் தெரிவித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஏஐசிசிடியூ தஞ்சை மாவட்ட லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழக முதன்மை மேலாளரிடமும் நேற்று மனு அளித்தனர் இந்த மனுவை ஏஐசிசிடியூ சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர். மதியழகன் வழங்கினார்.அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: அனைத்து லாரிகளுக்கும் டர்ன் முறையில் எந்தவித முன்னுரிமையும் இன்றி வரிசையில் டோக்கன் வழங்க வேண்டும் என்றும், தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்தில் தற்போது வழங்கப்படும் வேறுபட்ட வாடகை முறையை நீக்கி, இரு பகுதிகளுக்கும் ஒரே வாடகை நிர்ணயிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.மேலும், நுகர்பொருள் வாணிபக் கழக துணை மண்டல அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் எடுக்கப்பட்ட முடிவுகளை சப் ஒப்பந்ததாரர்கள்…

Read More

கும்பகோணம் சௌராஷ்டிரா புதுத்தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சத்யகாளியம்மன் திருக்கோவிலின் 50-வது ஆண்டு பிரம்மோற்சவ சமபந்தி அன்னதானப் பெருவிழாவை முன்னிட்டு, 2026-ஆம் ஆண்டு 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தலா ரூ.1,000 கல்வி ஊக்கத்தொகை வழங்கி கோவில் நிர்வாகம் கவுரவித்தது.ஸ்ரீ சத்யகாளியம்மன் சேவா டிரஸ்ட் தலைவர் எம்.பி. கண்ணன் தலைமை வகித்தார், டி.பி. கிருஷ்ணன் மற்றும் ஆர். சாரங்கபாணி முன்னிலை வகித்தனர். திருமதி கே. அபிராமி வரவேற்புரை நிகழ்த்தினார்.விழாவில் ஹரிதா மஹால் நிறுவனர் என்.எம்.ஆர். மோகன், குழந்தைகள் நல முதன்மை மருத்துவர் டாக்டர் எம்.ஆர்.வி. மணிவண்ணன், சி.ஏ.ஆர். கணேஷ், ஸ்ரீ சரஸ்வதி பாடசாலா அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி கே. லதா, சௌராஷ்டிரா அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியின் (ஓய்வு) தலைமை ஆசிரியர் திருமதி ஆர்.…

Read More

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகர் சௌராஷ்டிரா புதுத் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சத்யகாளியம்மன் ஆலயத்தின் 50-வது ஆண்டு பிரம்மோற்சவ விழா, குடந்தை வீரசைவ பெரிய மடம் ஸ்ரீ வீரசிங்காதன பீடாதிபதி ஸ்ரீலஸ்ரீ நீலகண்ட சாரங்க தேசிகேந்திர சுவாமிகளின் அருளாசியுடன் பக்தி பரவசமாக தொடங்கப்பட்டு விழா நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது பராபவ ஆண்டு ஆடி மாதம் 5-ஆம் நாள் ஜூலை 21-அன்று மாலை விக்னேஸ்வர பூஜை, மற்றும் சத்தியக்கொடி ஏற்றுதல், பின்னர் காப்பு கட்டுதல் நிகழ்ச்சிகளுடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. தொடர்ந்து சௌராஷ்டிரா சமூக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, பேனா, பென்சில் சாக்லேட் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. மேலும், ஆலய திருப்பணியில் பங்காற்றிய சௌராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற முன்னோர்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டதுடன், விழாக்குழுவினர் சார்பில் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன. இதில் ஏராளமான சௌராஷ்டிரா சமூகத்தினர் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.இதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளாக, ஜூலை…

Read More

செவாலிய திரை உலக ஜாம்பவான் சிவாஜி கணேசன் 25 ஆவது நினைவு நாள் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எல் ரெக்ஸ் தலைமையில் மலர் அணிவித்து மரியாதை…. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 25 வது நினைவு நாளை முன்னிட்டு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர், மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் சத்தியநாதன், பூக்கடை பண்ணீர், கோட்டதலைவர்கள் புத்தூர் மலர் வெங்கடேஷ், ஜங்ஷன் பிரியங்கா பட்டேல், காட்டூர் ராஜா டேனியல் ராய், அரியமங்கலம் அழகர், ஏர்போர்ட் கனகராஜ், பொன்மலை பாலு, அணி தலைவர்கள் முன்னாள் ராணுவ பிரிவு மாநில தலைவர் ராஜசேகரன், கலைபிரிவு மாநில துணைத்தலைவர் அருள், சுப்புராஜ், ஐடி பிரிவு லோகேஷ், ஓபிசி பிரிவு ரியாஸ், ஊடக பிரிவு செந்தில், வார்டு நிர்வாகிகள் கண்ணன், சரவணன், கிஷோர், ரவி, ராஜா, வளன்ரோஸ்…

Read More

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நெல் ஏற்றுதல், இறக்குதல் பணிகளில் ஈடுபட்டு வரும் லாரி உரிமையாளர்களுக்கு வரிசைமுறையில் டோக்கன் வழங்காமலும் முறைகேடு செய்வதாக புகார் எழுந்துள்ளது இதனால் லாரி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐசிசிடியூ (AICCTU) தொழிற்சங்கம் சார்பில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளனர்கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் அமைந்துள்ள (ஏஐசிசிடியூ) மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஏஐசிசிடியூ மாநில துணைத்தலைவரும், தஞ்சை மாவட்ட லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளருமான ஆர். மதியழகன் கூறியதாவது:தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நெல் ஏற்றுதல் மற்றும் இறக்குதல் பணிகளை லாரி உரிமையாளர்கள் அன்றாடம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், மண்டல மேலாளர்கள் சிலர் ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு, லாரி உரிமையாளர்களுக்கு வரிசைமுறையில் டோக்கன் வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்,இதனால் லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, தொழில் நலிவடைந்துள்ளதாக தெரிவித்தார்.மேலும்,…

Read More

இந்திய மாதர் தேசிய சம்மேளனம் தீர்மானம் கும்பகோணத்தில் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு இடையூறாக உள்ள 4 டாஸ்மாக் மதுபானக் கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். இல்லையென்றால் விரைவில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இந்திய மாதர் தேசிய சம்மேளனம் தீர்மானம் கொண்டு வந்துள்ளது.இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் தஞ்சை வடக்கு மாவட்டக் குழு கூட்டம் 18 ஆம் தேதி சனிக்கிழமை காலை கும்பகோணம் பழைய பேருந்து நிலையம், காளியம்மன் கோவில் தெருவில் உள்ள ஏஐடியூசி தொழிற்சங்க அலுவலகத்தில் நடைபெற்றது, மாவட்டத் தலைவி பி. தாமரைசெல்வி தலைமை வகித்தார். மாநகர செயலாளர் எம். கவிதா வரவேற்றார் மாநிலக் குழு முடிவுகள் மற்றும் எதிர்கால கடமைகள் குறித்து மாவட்டச் செயலாளர் பா. சரண்யா உரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் எம். ராஜலக்ஷ்மி மாவட்ட நிர்வாகிகள் எம். பிரியா, ஜெ. சந்திரா, கே. கலைச்செல்வி, எம். ரேணுகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்கூட்டத்தில், கும்பகோணம் மாநகர்…

Read More