Author: Sahabudeen

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:- பெங்களூரு குண்டு வெடிப்பு குறித்து மத்திய மந்திரி ஷோபா கரந்த்லாஜேவின் பொறுப்பற்ற கருத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதுகுறித்து கருத்து தெரிவிக்க ஒருவர் என்.ஐ.ஏ. அதிகாரியாக இருக்க வேண்டும் அல்லது குண்டுவெடிப்பு சம்பவத்துடன் நெருக்கமாக தொடர்புடையவராக இருக்க வேண்டும். பா.ஜ.க.வின் இந்த பிளவுபடுத்தும் பேச்சை தமிழர்களும் கன்னடியர்களும் கண்டிப்பாக நிராகரிப்பார்கள். அமைதி, நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பேசிய மந்திரி ஷோபா மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். பிரதமர் முதல் தொண்டர் வரை பா.ஜ.க.வில் உள்ள அனைவரும் கேவலமான பிரிவினைவாத அரசியலில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். மத்திய மந்திரியின் இந்த வெறுப்புப் பேச்சை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டு உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read More

மஜக பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசிது அறிக்கை! கடந்த மார்ச் 16ம் தேதியன்று சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான மாண்புமிகு எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது அவர்கள் மஜக தலைமை நிர்வாகிகளுடன் சென்று சந்தித்து அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தோம். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டில் மஜக தொண்டர்கள் உறுதியாக உள்ளனர். கூட்டணியின் வெற்றிக்கு நாடு முழுவதும் களப்பணி ஆற்றுவார்கள் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

Read More

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. இணைந்துள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணையலாம். என தகவல் வெளியான நிலையில் தற்போது பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. கூட்டணியில் இணைந்துள்ளது. திண்டிவனத்தில் உள்ள தைலாபுரத்தில் இன்று நடைபெற்ற பா.ம.க. உயர்மட்ட கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. எத்தனை தொகுதிகளில் போட்டியிடும்?, வேப்டாளர்கள் யார்? என்பது குறித்த அறிவிப்பை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விரைவில் வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

Read More

ஏப்ரல் 19, 26 தேர்தல் தேதிகளை மாற்ற வேண்டும்!தேர்தல் ஆணையத்துக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல் இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான அறிவிப்புகள் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 7 கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதன்படி முதல் கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதேப்போல் ஏப்ரல் 26ம் தேதி கேரளா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் இரண்டாம் கட்ட தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஏப்ரல் 19 மற்றும் ஏப்ரல் 26 ஆகிய தேதிகள் முஸ்லிம்கள் மஸ்ஜித்களில் கட்டாய கூட்டு பிரார்த்தனை செய்யும் ஜும்ஆ நாளான வெள்ளிக்கிழமையாகும். இதனால் முஸ்லிம் வாக்காளர்கள் வாக்கு செலுத்துவதில் தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளது. மட்டுமின்றி, அரசியல் கட்சிகளின் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த பூத் ஏஜெண்ட் உள்ளிட்ட தேர்தல் பணியாளர்களின் பணியும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.…

Read More

மக்களவை தேர்தல் ஒருங்கிணைப்பு பணிகள் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டதாக தமிழக அரசின் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;- முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தமிழை நேசித்து அவரிடமே ‘கலைஞானி’ என்று பட்டம் பெற்றவர், சமத்துவமும் பகுத்தறிவும் அரசியல் பார்வையாகக் கொண்டிருப்பவர், மதவெறி-மக்கள் விரோத பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்திட இந்தியா கூட்டணியில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து களமாடும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அவர்களை சந்தித்து நாடாளுமன்றத் தேர்தல் களத்திலும்-தளத்திலுமான ஒருங்கிணைப்புப் பணிகள் குறித்து ஆலோசித்தோம். மகத்தான வெற்றிப் பயணத்தின் தொடக்கம்.” இவ்வாறு டி.ஆர்.பி.ராஜா பதிவிட்டுள்ளார். அதேபோல் கமல்ஹாசன் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாடு காக்கும் ஒற்றை நோக்கம். அதற்கான செயல்பாடுகளின் திட்டம் ஆலோசிக்க தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சர், அன்பு இளவல் டி.ஆர்.பி.ராஜா…

Read More

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிடும் அறிக்கை குஜராத் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் தங்கும் விடுதியில் உஸ்பெகிஸ்தான், ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் மாணவர்கள் ரமலானை முன்னிட்டு அவர்களின் அறையில் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த கும்பல் ஒன்று எதிர்ப்பு தெரிவித்து மதம் சார்ந்த முழக்கங்களை எழுப்பியதாகத் தெரிகிறது. அத்தோடு இல்லாமல் வாக்குவாதம் செய்து வன்முறையிலும் ஈடுபட்டுள்ளனர்.இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஒரு இலங்கை மாணவர் உட்பட 5 வெளிநாட்டு மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவம் குஜராத் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் தங்கி இருக்கும் ‘ஏ’ பிளாக்கில் நடந்துள்ளது. முஸ்லிம் மாணவர்களின் மடிக்கணினிகள், அலைப்பேசிகள் உடைமைகள் போன்றவற்றையும் வன்முறை கும்பல் அடித்து நொறுக்கி உள்ளது. தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஒரு மாணவர் தொடர்ந்து சிகிச்சையில் இருப்பதாகவும் நான்கு பேர் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ளனர். குற்றவாளிகளைக் கைது செய்வதில் குஜராத் மாநில…

Read More

அறந்தாங்கி,மார்ச்.18-புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அப்துல் அமீது தெருவில் செயல்படும் அறந்தை மக்கள் நல பைத்துல்மால் அமைப்பினர் 1.25 லட்சம் மதிப்புள்ள 10 கிலோ அரிசி பைகளை 250 ஏழை குடும்ங்களுக்கு வழங்கினர். பைத்துல்மால் தலைவர் நோக்கியா சாகுல் அமீது தலைமையில் செயலாளர் முகம்மது ஆரிப், பொருளாளர் அப்பாஸ் ஆகியோர் முன்னிலையில் கிரசன்ட் பள்ளி தாளாளர் முகம்மது அசாரூதீன், சேக்பாத்திமா பள்ளி தாளாளர் சேக் அலாவுதீன், எவர்கிரீன் பள்ளி தாளாளர் முபாரக் அலி ஆகியோர் ஏழை குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி கொண்ட பைகளை கொடுத்து துவக்கிவைத்தனர். பைத்துல்மால் நிர்வாகிகள் முகம்மது அனஸ், காலித் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

Read More

தமிழகத்தில் ஏப்ரல் 19-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. வரும் 20-ந்தேதி முதல் வேட்பு மனுதாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது? என்பது பற்றி பா.ம.க. எந்த முடிவையும் எடுக்காமலேயே உள்ளது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேருவதற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விரும்புவதாகவும். ஆனால் பா.ஜனதா கூட்டணியை அன்புமணி ராமதாஸ் விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகின. இப்படி பா.ம.க. மேலிடத்தில் இரண்டு விதமான கருத்துக்கள் நிலவி வருவதாலேயே கூட்டணி விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படாமல் இழுபறி நீடித்து வருகிறது. இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பா.ம.க. எம்எல்ஏ அருள் சந்தித்து பேசி வருகிறார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் முகாம் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டால் நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.…

Read More

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று முதல் பறக்கும் படைகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் 702 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. இது போன்று 702 நிலையான கண்காணிப்பு குழுவினரும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு மூன்று பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் என்ற அடிப்படையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள், எட்டு மணி நேரம் அடிப்படையில், மூன்று ஷிப்ட்டாக பணிபுரிவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே சென்னை யானைக்கவுனி பகுதியில் தனியார் அலுவலகம் ஒன்றில் பெரிய அளவில் ஹவாலா பணப்பரிமாற்றம் நடைபெறுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற பூக்கடை உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார், மூவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் பைகளில் வைத்திருந்த கட்டுக்கட்டான பணத்தை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். விசாரணையில்…

Read More

மக்களவைத் தேர்தல் குறித்து அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் துவங்கி உள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், கடந்த தேர்தலில் வெற்றி பெற்று எம்பியாக உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு இந்த முறையும் மதுரை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. INDIA கூட்டணி சார்பில் திமுக மதுரை தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கியது. அதன்படி மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியின் மதுரை வேட்பாளராக சு.வெங்கடேசன் அறிவிக்கப்பட்டார். தேர்தல் குறித்து அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் இன்று அதிகாலையே தேர்தலுக்கான பணியை துவங்கி விட்டார் சு.வெங்கடேசன். அதன்படி மதுரை மகபூப்பாளையம் பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் உள்ள தியாகி பாலு அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து தேர்தல் பணியை தொடங்கியுள்ளார்.…

Read More