Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

    April 5, 2026

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த சூழலில், சென்னையில் ஒன்றரை கோடி ரூபாய் ஹவாலா பணம் சிக்கியுள்ளது.
    இந்தியா

    தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த சூழலில், சென்னையில் ஒன்றரை கோடி ரூபாய் ஹவாலா பணம் சிக்கியுள்ளது.

    SahabudeenBy SahabudeenMarch 17, 2024No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று முதல் பறக்கும் படைகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் 702 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. இது போன்று 702 நிலையான கண்காணிப்பு குழுவினரும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு மூன்று பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் என்ற அடிப்படையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள், எட்டு மணி நேரம் அடிப்படையில், மூன்று ஷிப்ட்டாக பணிபுரிவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே சென்னை யானைக்கவுனி பகுதியில் தனியார் அலுவலகம் ஒன்றில் பெரிய அளவில் ஹவாலா பணப்பரிமாற்றம் நடைபெறுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில் அங்கு சென்ற பூக்கடை உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார், மூவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் பைகளில் வைத்திருந்த கட்டுக்கட்டான பணத்தை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். விசாரணையில் யாசர் அராபத் என்பவர், குணா ஜெயின் மற்றும் மற்றொரு நபருக்கு பணம் கொடுக்க வந்தது தெரியவந்தது.

    ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவர் வழங்கும் அறிவுறுத்தலின்பேரில் பணத்தை கொடுக்க வந்ததாக யாசர் அராபத் தெரிவித்தார்.

    Post Views: 246
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026

    திருச்செந்தூர்: வாக்கு சேகரிக்கச்சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

    April 5, 2026

    இன்ஸ்டாகிராம் பழக்கம்: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை

    March 22, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,067)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (182)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (281)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.