தூத்துக்குடி மாநகரில் அரசு கலை கல்லூரி அமைக்க வேண்டும் என்று இளைஞர்கள் முன்னேற்ற அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தூத்துக்குடி இளைஞர்கள் முன்னேற்ற அமைப்பின் தலைவர் கிங்ஸ்டன், செயலாளர் இஸ்ரவேல் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், “தூத்துக்குடி மாநகரில் அரசு கலை கல்லூரி அமைக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டக் கல்லூரி அமைய வழிவகை செய்ய வேண்டும்.
பருவமழை துவங்கும் முன்பாக மாநகர் பகுதிகளில் சாலை, கால்வாய், மேம்பாலம் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். பருவ மழைக்கு முன்பாக 3ஆம் மைல் பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை கட்டடத்தை உடனடியாக திறக்க வேண்டும். தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட பர்னிச்சர் பார்க்கை விரைவில் திறந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


