காக்களூர் பைபாஸ் சாலையில் சாலை வசதி, தெருவிளக்கு, அடிப்படை வசதி கோரி பொது மக்கள் சாலை மறியல்: எந்த அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை என மக்கள் குற்றம் சாட்டு குற்றச்சாட்டு :
திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஊராட்சி 4-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் திருவள்ளூரில் இருந்து ஆவடி செல்லும் காக்களூர் பைபாஸ் சாலையில் டார்லிங் என்ற தனியார் ஷோரூம் செயல்பட்டு வருகிறது. அந்த ஷோரூம் ஒட்டி உள்ள தெருவில் ஷோரூமுக்கு தேவையான எலக்ட்ரானிக் பொருட்களை கன்டெய்னர் லாரி மூலம் கொண்டு வந்து நிறுத்திவிட்டு நான்கு மணி நேரம் 5 மணி நேரத்துக்கு மேலாக இறக்குவதாக கூறப்படுகிறது.இதனால் அவ்வழியாக செல்லக்கூடிய பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மற்றும் மருத்துவமனைக்கு செல்லும் முதியவர்கள் செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.இதனால் பொதுமக்கள் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சாலை அமைப்பதற்காக குடியிருப்பவாசிகளிடமிருந்து பணம் வசூல் செய்து சாலை அமைப்பதற்கான பணியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் தனியார் ஷோ ரூம் கனரக வாகனங்கள் வந்து செல்வதால் சாலைகள் குண்டும் குழியுமாக மாறுவதால் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டுக் கொள்ளுங்கள் என அலட்சியமாக பதில் அளித்துள்ளனர். ஆனால் உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பின அனைவரும் திமுகவினர் நகை உள்ள நிலையில் இந்த அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதே நேரத்தில் ஷோரூமில் இருந்து கொண்டு வரப்படும் குப்பை கழிவுகளையும் பொதுமக்கள் நடந்து செல்லக்கூடிய சாலையில் கொட்டிவிட்டு செல்வதாகவும் கூறப்படுகிறது.மேலும் கழிவு நீரை வெளியேற்ற ஊராட்சி நிர்வாகம் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், தெருவிளக்கு இல்லாததால் இரவு நேரங்களில் பெண்கள் நடந்து செல்லவே அச்சப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். இதனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருவள்ளூர் -ஆவடி சாலை காக்களூர் பைபாஸ் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் வாக்கவாச ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து தகவல் அறிந்த துணை வட்டாட்சியர் தினேஷ், திருவள்ளூர் கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணி, தாலுகா போலீசார் ஆகியோர் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


