தோழர் திருமாவிற்கு Z பிரிவை வழங்குக ஜி ஜி சிவா கோரிக்கை
தேசிய முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் ஜி ஜி சிவா உள்துறை மற்றும் உச்சநீதிமன்ற நீதி அரசருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு இருப்பதாவது
உச்சநீதிமன்ற நீதிபதியின் மேல் செருப்பை வீசிய சம்பவத்தை கண்டிக்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற வாசலில் 07 09 2025 அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோழர் திருமா எம் பி அவர்கள் சிறப்புரையில் சனாதான சக்திகளை கண்டித்து வழக்கறிஞர்கள் சார்பாக மாபெரும் கண்டனம் உரை நிகழ்த்தப்பட்டது பிறகு தோழர் திருமா அவர்கள் அப்பொழுது சாலையில் தனது வாகனத்தில் அமர்ந்து நீதிமன்ற வாசல் சாலை பகுதியில் சென்று கொண்டு இருந்தபோது ராஜீவ் காந்தி என்கின்ற வழக்கறிஞர் திட்டமிட்டு எழுச்சித் தமிழரின் வாகனம் வருவதை பார்த்து தனது இருசக்கர வாகனத்தை எழுச்சித் தமிழரின் வாகனமும் வேண்டுமென்றே இடித்து நிற்பது போன்று அவராகவே வாகனத்தை நிறுத்திவிட்டு தோழர் திருமா அவர்களின் வாகனம் தான் இருசக்கர வாகனத்தை இடித்து விட்டதாக ஒரு பொய் பரப்புரையை மேற்கொண்டு வாகனத்தில் அமர்ந்து கொண்டிருக்கும் தோழர் திருமாவை வம்புக்கு இழுத்து கலங்கம் ஏற்படுத்தி இதில் சொற்ப அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்பதற்காகவே ராஜீவ் காந்தி என்கின்ற வழக்கறிஞர் தோழர் திருமாவின் பாதுகாவலர்கள் மற்றும் இயக்கத் தோழர்கள் மேலும் தோழர் திருமாவை நோக்கியும் திட்டமிட்டு தகாத வார்த்தைகளை பேசி அங்கே மிகப் பெரிய அசம்பாவிதம் ஏற்படுத்தக் கூடிய வகையிலே ராஜீவ் காந்தி அவர்களின் செயல்பாடுகள் அமைந்திருப்பது வெட்ட வெளிச்சமாக அங்கே இருக்கக்கூடிய சிசிடிவி காணொளிகளில் தெளிவாக பதிவாகி இருக்கிறது இந்த திட்டம் எதற்காக என்றால் அத்துமீறி குழப்பத்தை ஏற்படுத்தி திருமாவிற்கு களங்கம் ஏற்படுத்த அல்லது அவர் கலந்து கொள்ளும் கூட்டங்களில் கலவரத்தை ஏற்படுத்த இந்த முயற்சி நடந்து இருக்கிறது என்றால் விசிக வில் லட்சோப லட்ச தொண்டர்களை வைத்துக்கொண்டு இந்திய அளவில் பாஜகவையும் சங் பரிவார் சங்கங்களையும் சனாதனத்தை எதிர்த்தும் எந்தவித சமரசத்திற்கும் செவி சாய்க்காமல் அரசியலில் களம் காணுகிறார் இந்த ஆற்றல் மிக்க செயல் பாடுகள் பாஜக ஆர் எஸ் எஸ் சங்க பரிவார் சங்கங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது ஆகவே எப்படியும் தோழர் திருமாவை அரசியல் களத்தில் வீழ்த்தி விட வேண்டும் என்று சதித்திட்டம் தீட்டுகிறார்கள் எனவே ஜனநாயக சக்திகள் தோழர் திருமாவிற்கு இந்த நேரத்தில் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் அந்த வகையில் தோழர் திருமா அவர்களின் உயிரை பாதுகாக்க உன் துறை அமைச்சகத்திற்கு முழு பொறுப்பு உண்டு மேலும் உச்சநீதிமன்ற நீதி மன்றத்திற்கும் முழு பொறுப்பு உண்டு என்பதினால் தங்கள் இருவருக்கும் இந்த கடிதத்தை தலைவணங்கி எழுதிக் கொள்கிறேன் ஆகவே தோழர் திருமாவிற்கு Z பாதுகாப்பை வழங்கி அவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென்று தேசிய முன்னேற்ற கழகத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டு இருக்கிறார்


