தேசிய முன்னேற்றக் கழகம் நிறுவன தலைவர் ஜி ஜி சிவா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்
கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை பேரூராட்சிக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையத்திற்கு சுதந்திரப் போராட்டத் தியாகியும் ஒட்டுமொத்த மக்களுக்காக கடைசி மூச்சு வரை தனது சேவையை செய்து அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாபெரும் உத்தமத் தலைவர் காயிதே மில்லத் அவர்களின் பெயரை சூட்டுவதாக முடிவு செய்யப்பட்டு இருந்தது இதை அறிந்த அப்பகுதியைச் சார்ந்த பாஜக ஆர் எஸ் எஸ் சங்பரிவார் சங்கங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்களும் தொண்டர்களும் குறிப்பாக மக்களால் தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர்களும் ஒன்று கூடி திட்டு விளை புதிய பேருந்து நிலையத்திற்கு கண்ணியத் தலைவர் காயிதே மில்லத் அவர்களின் பெயரை சூட்டக் கூடாது அவர் ஒரு தேச விரோதி என கூக்குரல் எழுப்பி இருக்கிறார்கள் இந்த பாஜக ஆர்எஸ்எஸ் சங்பரிவார் சங்கங்கள் இந்திய நாட்டிற்காக ஒருபோதும் ஒரு சதவீதம் கூட போராடாதவர்கள் மத்தியில் அன்றே இந்திய சுதந்திரத்திற்காக போராடி லட்சோப லட்ச இஸ்லாமிய உறவுகள் செத்து மடிந்திருக்கிறார்கள் மேலும் நாடெங்கும் உள்ள தமது சொத்துக்கள் இந்த நாட்டிற்காகவே எழுதி வைத்திருக்கிறார்கள் நிலைமை இப்படி இருக்க ஒரு துளி கூட கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்களின் பெயரை எதிர்ப்பதற்கு பாஜக அரசுக்கு தகுதி இல்லை என்பதனை காட்டமாக பதிவு செய்கிறேன் தமிழ்நாடு அரசு சமூக நீதி அரசு மாண்புமிகு முதலமைச்சர் தளபதி அவர்கள் இதில் உடனுக்குடன் தனி கவனம் செலுத்தி திட்டுவிளை புதிய பேருந்து நிலையத்திற்கு ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட அய்யா காயிதே மில்லத் அவர்களின் பெயரை சுட்டிட நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் இது போன்று தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த துடிக்கும் பாஜக ஆர் எஸ் எஸ் பொறுப்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து சமூகநீதி நிலைநாட்டிட வேண்டும் என தாய்மையோடு தேசிய முன்னேற்றக் கழகத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என ஜி ஜி சிவா குறிப்பிட்டு இருக்கிறார்


