பள்ளிகரனை மாயா அகடமியில் யோக, சிலம்பம், கராத்தே பயிற்ச்சி பெற்ற மாணவர்கள் கோவாவில் நடைபெற்ற சர்வதேச விளையாட்டு போட்டியில் பயிற்ச்சியாளர் முருகன் தலைமையில் 86 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு பல்வேறு நாடுகளுடன் நடைபெற்ற சாம்பியஷிப் போட்டிகளில் வெற்றிபெற்று 41 தங்கம், 22 வெள்ளி, மற்றும் சான்றிதழ், கோப்பைகளுடன் சென்னை செண்ட்ரல் இரயில் நிலையம் திரும்பிய 86 வீரர், வீராங்கனைகளுக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சந்தன மாலை, சால்வை, பூங்கொத்து வழங்கி உற்ச்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பயிற்ச்சியாளரும், மாயா அகடமியின் நிறுவனருமான முருகன் பேசுகையில் கோவாவில் நடைபெற்ற சர்வதேச கராத்தே, சிலம்பம், யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் தாய்லந்து, சிங்கபூர், மலேஷியா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 14 நான்கு மாநிலத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இவர்களுடன் போட்டியிட்ட மாயா அகடமியை சேர்ந்த 86 மாணவர்கள் வெற்றிபெற்று 41 பேர் தங்கம், 22 பேர் வெள்ளி பதக்கமும் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். மேலும் தாய்லாந்தில் நடக்க இருக்கும் போட்டிக்கு தேர்வாகி உள்ளனர் எனவும், அரசு விளையாட்டு துறைக்கு ஆதரவாகதான் உள்ளது. தேர்வான வீரர்கள் தாய்லந்து செல்ல உள்ளதால் அவர்களை ஊக்குவிக்க தமிழக துனை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து பேச உள்ளதாக தெரிவித்தார்.

