கோவாவில் நடைபெற்ற சர்வதேச விளையாட்டு போட்டியில் வேங்கை வாசலில் உள்ள ட்ரீம் கேச்சர் அகடமியில் பயிற்ச்சி பெற்ற 32 மாணவர்கள் தலைமை பயிற்ச்சியாளரும், ட்ரீம் கேச்சர் அகடமியின் நிறுவனருமான ஷிகான் முத்துகுமார் தலைமையில் கோவாவில் சர்வதேச விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டனர். சிங்கபூர், மலேஷியா, தாய்லாந்து, நேபாளம் உள்ளிட்ட நாடுகளின் 14 மாநிலத்தில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டு கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றனர். போட்டியில் வேங்கை வாசல் ட்ரீம் கேச்சர் அகடமியை சேர்ந்த 32 மாணவர்கள் கலந்து கொண்ட போட்டியில் 10 தங்கபதக்கம், 7 வெள்ளி, 2 வெங்கல பதக்கங்களை வெற்றிபெற்று சென்னை திரும்பிய வீரர் வீராங்கனைகளுக்கு சென்னை செண்ட்ரல் இரயில் நிலையத்தில் உறனவினர்கள் மற்றும் நண்பர்கள் சந்தன மாலை, சால்வை அணிவித்தும் பூங்கொத்து வழங்கி உற்ச்சாக வரவேற்பு அளித்து அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ட்ரீன் அகடமியின் நிறுவனர் ஷிகான் முத்துகுமார் பேசுகையில் எனது அகடமியில் பயின்று 10 தங்கம், 7 வெள்ளி, 2 வெங்கல பதக்கங்களை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்தியாவில் இருந்து அதிகபடியான மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். கராத்தே போட்டியில் நேபாளமும், சிலம்பத்தில் மலேஷியா, சிங்கப்பூர் நாடுகள் கடுமையாக இருந்தது, இருப்பினும் 60 நாட்கள் கடுமையான பயிற்ச்சியினால் எங்கள் மாணவர்கள் வெற்றிபெற்றது மகிழ்ச்சியை அளிக்கிறது எனவும், எங்களது கோரிக்கை என்னவென்றால் இனிவரும் இரண்டு போட்டிகளில் ஆசிய அளவில் நடைபெற இருப்பதால் அரசு ஊக்குவித்து உணவு மற்றும் பயண செலவுகளை ஏற்று ஊக்க தொகை வழங்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்தார்.

