Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்

    July 29, 2026

    பிலிப்பைன்ஸில் நடைபெற்ற சர்வதேச சட்ட மாநாட்டில் இந்திய வழக்கறிஞர் சங்கம் சார்பில் பாரதி அம்பிகாபதி பங்கேற்பு

    July 29, 2026

    யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால்.. குறிஞ்சி பூக்களைப் பார்வையிட பொதுமக்களுக்குத் தடை

    July 26, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » பல்பில் ரகசிய கேமராக்கள் அந்தரங்க வீடியோக்களால் பெண் அரசு அதிகாரிக்கு மிரட்டல்..!
    இந்தியா

    பல்பில் ரகசிய கேமராக்கள் அந்தரங்க வீடியோக்களால் பெண் அரசு அதிகாரிக்கு மிரட்டல்..!

    SahabudeenBy SahabudeenFebruary 8, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    போலி செய்தியாளர்கள் சிக்கியது எப்படி?

    கர்நாடக மாநிலம் பெலகாவியில் கணவருடன் வசித்து வந்த அரசு பெண் அதிகாரி ஒருவர், தனது அந்தரங்க வீடியோக்களை மொபைலில் அனுப்பி, ஒரு கும்பல் பணம் கேட்டு மிரட்டுவதாக போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.

    இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மொபைல் எண்ணை வைத்து கோகாக் பகுதியை சேர்ந்த சமீர் நிசார் அகமது ஷேக், அப்துல் ரஷீத் மகந்தர் மற்றும் முகமது பலேகுந்த்ரி ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.

    அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்வெளியே வந்தன.

    அரசு பெண் அதிகாரி வீட்டில் பணிப் பெண் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். அரசு பெண் அதிகாரி அலுவலகம் செல்லும் போது வீட்டின் ஜன்னலில் சாவியை வைத்து விட்டு செல்வதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். அந்த பணிப் பெண்ணிற்கு மட்டும் சாவி இருக்கும்இடம் தெரிந்ததால், அவர் வழக்கம் போல சாவி மூலம் கதவை திறந்து வேலை பார்த்து வந்துள்ளார்.

    இந்நிலையில், கைதான மூவரும் அந்த பணிப் பெண்ணிடம் “நாங்கள் உனக்கு பணம் தருகிறோம், ஆனால் நாங்கள் அந்த வீட்டிற்குள் செல்ல உதவ வேண்டும்” என கூறியுள்ளனர்.பணத்தாசையில் அந்த பெண்ணும், எஜமானி வெளியே சென்ற பின்னர், அந்த மூவருக்கும் தகவல்தெரிவித்துள்ளார்

    அப்போது வீட்டிற்குள் நுழைந்த அந்த மூவரும், படுக்கையறை, மற்றும் ஹால் பகுதிக்கு சென்று அங்கு பொருத்தப்பட்டிருந்த பல்பின் ஹோல்டர்களை கழற்றி விட்டு, தாங்கள் எடுத்து வந்த ரகசிய கேமராக்கள் உள்ள ஹோல்டர்களை பொருத்திவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

    இதனை தொடந்து கணவன் மனைவி தாம்பத்திய உறவில் இருப்பதை எல்லாம் அந்த கேமராவில் அவர்கள் ரெக்கார்ட் செய்து அதனை சேகரித்து வைத்துள்ளனர். இந்நிலையில் அந்த கும்பல், பெண் அரசு அதிகாரின் மொபைல் வாட்ஸ் அப் எண்ணிற்கு அந்த வீடியோக்களைஅனுப்பி வைத்தனர்.இதனை பார்த்து அந்த பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

    அப்போது, அந்த கும்பல் நாங்கள் பத்திரிக்கையாளர்கள் என்றும், இந்த வீடியோக்களை சமூக ஊடகங்கள் மற்றும் செய்தி சேனல்களில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டியுள்ளனர். மேலும் அந்த வீடியோக்களை எல்லாம், வெளியிடாமல் இருக்க வேண்டும்என்றால், எங்களுக்கு 50 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த, அந்த பெண் அரசு அதிகாரி, போலீஸ் கமிஷ்னரிடம் புகார் அளித்துள்ளார்.

    Post Views: 781
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    நந்தன் நிலேகனி தலைமையில் தேர்வு சீர்திருத்தங்களுக்கான உயர்மட்டக் குழு:

    July 26, 2026

    மோடி செய்தியாளர்கள் சந்திப்பு

    July 20, 2026

    மம்தாவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!

    July 20, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (385)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.