ஏஐடியூசி ஆர்ப்பாட்டம்
தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கப்படும் செயலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏ ஐ டி யூ சி அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் தமிழ்நாடு அரசு ஆவடி, தாம்பரம், வேலூர், ஓசூர், கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், மதுரை, தூத்துக்குடி, திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய 12 மாநகராட்சிகளில் குப்பை சேகரிப்பு மற்றும் தூய்மைப் பணிகளை பி.பி.பி. “Public Private Partnership” முறையில் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதன்கிழமை அன்று கும்பகோணம் மாநகராட்சி வளாகத்தின் முன்பு ஏஐடியூசியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்ப்பாட்டத்திற்கு ஏ ஐ டி யூ சி மாநில செயலாளர் தோழர் ஆர். தில்லைவனம் தலைமை தாங்கினார்,சட்ட ஆலோசகர் சிபிஐ மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் மு.அ. பாரதி முன்னிலை வகித்தார், மேலும் ஏஐடியுசி நிர்வாகிகள் ஒன்றிய செயலாளர் பா. சரவணன், மாநகர செயலாளர் ஏ.ஜி. பாலன், திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர் ஆர். பழனி, மகாமக பொறுப்பாளர் மாவட்ட குழு உறுப்பினர்கள் கே. சரவணன் கே. நாராயணன் ஆகியோருடன் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை விளக்கவுரையாற்றிய ஏஐடியூசி மாநில செயலாளர் தோழர் ஆர். தில்லைவனம், “தூய்மைப் பணிகள் என்பது மக்களின் சுகாதாரம் மற்றும் நகரங்களின் பாதுகாப்புடன் தொடர்புடைய அத்தியாவசிய பொதுச் சேவை. இதை தனியாரிடம் ஒப்படைப்பது தொழிலாளர்களின் வேலைப் பாதுகாப்பையும் உரிமைகளையும் பாதிக்கும்,” என்றார்.மேலும், ஒப்பந்த மற்றும் அவுட்சோர்சிங் முறைகளால் தொழிலாளர்கள் குறைந்த ஊதியம், சமூகப் பாதுகாப்பின்மை போன்ற பிரச்சினைகளை சந்தித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது பணிபுரியும் அனைத்து தூய்மைப் பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன், கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, ஏஐடியூசி மாநில செயலாளர் தோழர் ஆர். தில்லைவனம் தலைமையில் 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் கே.எம். சுதா அவர்களிடம் கோரிக்கை மனுவை வழங்கினர்.இறுதியாக, தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட்டு, தொழிலாளர்களின் வேலை பாதுகாப்பு, வாழ்வாதாரம் மற்றும் உரிமைகளை உறுதி செய்ய வேண்டும் என ஏஐடியூசி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.செய்தியாளர் அ.மகேஷ்

