கும்பகோணத்தில் குடந்தை மருதம் லயன்ஸ் சங்கத்தின் 2026–27-ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு விழா, சனிக்கிழமை அன்று ஏ.ஆர்.ஆர் சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மஹாலில் சிறப்பாக நடைபெற்றது.விழாவில், 2026–27-ஆம் ஆண்டிற்கான சங்கத் தலைவராக லயன் வேணு ஜெயராமன், செயலாளர்களாக லயன் என். சங்கர் மற்றும் கே. பாலகிருஷ்ணன், பொருளாளராக கே. சண்முகசுந்தரம் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு முன்னாள் மாவட்ட ஆளுநர் லயன் எஸ். வீரபாண்டியன் பதவிப் பிரமாணம் செய்து வைத்து, லயன்ஸ் இயக்கத்தின் சேவைப் பணிகள் குறித்து சிறப்புரையாற்றினார்.புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து வைத்து, மண்டலத் தலைவர் லயன் மோகன் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து, புதிதாகப் பொறுப்பேற்ற சங்கத் தலைவர் லயன் வேணு ஜெயராமன் ஏற்புரையாற்றி, சமூக சேவையை மேலும் விரிவுபடுத்த உறுதியளித்தார்.விழாவில் சசிதரன், எழிலரசி ரவி, நடராஜன், சரவணபெருமாள், மாறன் மனோகரன் உள்ளிட்டோர் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்து பேசினர்.நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பயனாளிகளுக்கு அரிசி, புடவைகள், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும், மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி பைகளும் வழங்கப்பட்டன.முன்னதாக, முன்னாள் சங்கத் தலைவர் நெடுஞ்செழியன் வரவேற்புரையாற்றினார். நிறைவில் செயலாளர் லயன் என். சங்கர் நன்றியுரை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் சங்க இயக்குநர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.செய்தியாளர் அ.மகேஷ்
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
கும்பகோணத்தில் குடந்தை மருதம் லயன்ஸ் சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா: நலத்திட்ட உதவிகள் வழங்கல்
Related Posts
Add A Comment

