கும்பகோணம் பேட்டை வடக்கு மேலத்தெருவில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்: இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகர் பேட்டை வடக்கு மேலத்தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வரும் ஜூலை 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.இதையொட்டி, ஆலயத்தில் கும்பாபிஷேகத்திற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் மற்றும் திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, ஆலய விமானத்தில் இறுதிக்கட்ட வண்ணப் பூச்சு, சீரமைப்பு மற்றும் அழகுபடுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் யாகசாலை மண்டபத்தில் யாக வேள்வி கட்டுமான பணிகள் சிறப்பாக நடைபெற்று முடிந்து தயார் நிலையில் உள்ளது. தொடர்ந்து விழாவையொட்டி ஜூலை 10 முதல் 12 ஆம் தேதி வரை ஆகம விதிகளின்படி யாகசாலை பூஜைகள், கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள், வேதபாராயணம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.ஜூலை 12 ஆம் தேதி காலை 7.30 மணிக்கு ஆலய விமானத்திற்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து மூலவருக்கு மகா அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெறவுள்ளன. பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.இந்த புனித மகா கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் குடும்பத்துடன் திரளாக கலந்து கொண்டு ஸ்ரீ சித்தி விநாயகப் பெருமானின் அருளாசியைப் பெறுமாறு ஆலய நிர்வாகம், மற்றும் விழா கமிட்டியினர் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர் செய்தியாளர் அ. மகேஷ்
