சாயர்புரம் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம்.மற்றும் விழிப்புணர்வு சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக மரம் நடும் பணி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி .சாயர்புரத்தில் உள்ள டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரியில் நாட்டு நல பணி திட்டம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு மரம் நடும் பணி மற்றும் காலநிலை நிதிக்கான இளைய குரல் என்றும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் திரு. ந.ஜெயக்குமார் சந்தோஷ் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் டாக்டர் ஜே.ஜாஃபிந்த் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி நாசரேத் திருமண்டல எக்கலாஜிக்கல் கான்சென்ஸ் துறை செயலாளர் குருவானவர் திரு. எச். ஜான் சாமுவேல் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆலோசனை மற்றும் அறிவுரைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் டாக்டர். அபினேஷ் விலங்குகளின் ஆராய்ச்சி பற்றி எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியில் திரு.ந. ஜாக்சன் டேவிட், போப் கல்வியல் கல்லூரி தாளாளர் டாக்டர். பி. ஆலயமணி பேராசிரியர்கள் கல்லூரி ஊழியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த ஏற்பாடை நாட்டு நல பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர். டென்னிசன் செய்திருந்தார்.
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
சாயர்புரம் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம்.மற்றும் விழிப்புணர்வு
Related Posts
Add A Comment

