மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி சிறப்பாக கொண்டாட்டம்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கொட்டையூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.விழாவிற்கு பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் வசந்தி தலைமை வகித்து, காமராஜரின் கல்விப் பணிகள், ஏழை மாணவர்களின் முன்னேற்றத்திற்காக அவர் மேற்கொண்ட அர்ப்பணிப்புகள் மற்றும் மதிய உணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை மாணவர்களிடம் எடுத்துரைத்தார்.சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாலு, மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கி, கல்வியின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார். மாணவர்கள் காமராஜரின் வாழ்க்கை வரலாறையும், அவரின் சேவைகளையும் நினைவுகூர்ந்தனர்.நிகழ்ச்சியின் நிறைவில் தமிழ் ஆசிரியர் காசிநாதன் நன்றி கூறினார். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர். காமராஜரின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதுடன், மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு விழா இனிதே நிறைவுற்றது.செய்தியாளர் அ.மகேஷ்
