Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    தஞ்சாவூர் புதிய மாவட்ட வருவாய் அலுவலருக்கு விவசாயிகள் சங்கம் வாழ்த்து

    July 30, 2026

    சோளிங்கர் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்ககோரி கண்டன ஆர்ப்பாட்டம்

    July 30, 2026

    கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்

    July 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » தமிழகத்தில் மீண்டும் கொரோனா? -சுகாதாரத் துறை வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை!
    தமிழ்நாடு

    தமிழகத்தில் மீண்டும் கொரோனா? -சுகாதாரத் துறை வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை!

    SahabudeenBy SahabudeenJuly 15, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    தமிழகத்தில் மீண்டும் அதிவீரிய கொரோனா தொற்று பரவி வருவதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகளுக்குப் பொதுச் சுகாதாரத் துறை தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவுவதாகவோ அல்லது அதன் வீரியம் அதிகரித்திருப்பதாகவோ எவ்வித ஆதாரமும் இல்லை என்றும், பொதுமக்கள் தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் மருத்துவத் துறை

    அண்டை மாநிலமான ஆந்திராவில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக வெளியான செய்திகள் குறித்து விளக்கம் அளித்துள்ள தமிழக அரசு, அந்த உயிரிழப்புகளுக்குக் கொரோனா மட்டுமே காரணம் அல்ல என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது.

    வேலூர் மற்றும் ஆந்திராவில் உயிரிழந்த நபர்களுக்குச் சர்க்கரை நோய், சிறுநீரகக் கோளாறு மற்றும் புற்றுநோய் போன்ற கடுமையான இணை நோய்கள் இருந்துள்ளன.அவர்களுக்குக் கொரோனா தொற்று என்பது ஒரு தற்செயலான கண்டறிதல் மட்டுமே தவிர, அதுவே மரணத்திற்கு நேரடி காரணம் அல்ல என்று மருத்துவக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

    தமிழகத்தில் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டத்தின் கீழ் வழக்கமான சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதன்படி, 2026-ஆம் ஆண்டில் இதுவரை 335 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுகளை விடக் மிகக் குறைவு என்பதுடன், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் லேசான அறிகுறிகள் மட்டுமே தென்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    தேசிய வைராலஜி நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, தற்போது பரவி வரும் வைரஸ் வகை மிகவும் பலவீனமானது என்றும், சமூகத்தில் மிகக் குறைந்த அளவிலேயே இது பரவி வருவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் எவ்வித அச்சமோ அல்லது பதற்றமோ அடையத் தேவையில்லை.

    இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள் கூட்ட நெரிசலான இடங்களுக்குச் செல்லும்போது தகுந்த பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். காய்ச்சல், இருமல் அல்லது சுவாசக் கோளாறு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையைஅணுகுவது சிறந்தது.

    பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை தமிழகத்தின் நிலைமையை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறது. தேவையான அனைத்து தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளன. கைகளைச் சுத்தமாக வைத்திருப்பது மற்றும் இருமல் வரும்போது கைக்குட்டையைப் பயன்படுத்துவது போன்ற அடிப்படை சுகாதார முறைகளைத் தொடர்ந்துகடைப்பிடிக்குமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்க ள். வாட்ஸ்அப் மற்றும் பிற சமூக ஊடகங்களில் வரும் ஆதாரமற்ற செய்திகளைப் பகிராமல், அரசு வழங்கும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்புமாறு பொதுச் சுகாதாரத் துறை அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளது.

    Post Views: 148
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    தஞ்சாவூர் புதிய மாவட்ட வருவாய் அலுவலருக்கு விவசாயிகள் சங்கம் வாழ்த்து

    July 30, 2026

    சோளிங்கர் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்ககோரி கண்டன ஆர்ப்பாட்டம்

    July 30, 2026

    கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்

    July 29, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (387)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.