Homeதமிழ்நாடுமாவட்ட செய்திகள்கும்பகோணத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. மாநகர தெருவோர வியாபாரிகள் சங்க சிறப்பு பேரவைக் கூட்டம்:

கும்பகோணத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. மாநகர தெருவோர வியாபாரிகள் சங்க சிறப்பு பேரவைக் கூட்டம்:

கும்பகோணத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. மாநகர தெருவோர வியாபாரிகள் சங்க சிறப்பு பேரவைக் கூட்டம்: மாநகராட்சி நிர்வாகம் தினசரி வசூலிக்கும் கூடுதல் கட்டணத்தை ரத்து செய்து, ஆண்டுக்கு ரூ.750 மட்டும் வசூலிக்க தீர்மானம்கும்பகோணம், தெருவோர வியாபாரிகளிடம் கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம் தினசரி வசூலித்து வரும் கூடுதல் கட்டணத்தை உடனடியாக ரத்து செய்து, தெருவோர வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்தின்படி ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.750 மட்டுமே உரிமக் கட்டணமாக வசூலிக்க வேண்டும் என ஏ.ஐ.டி.யூ.சி. மாநகர தெருவோர வியாபாரிகள் சங்கத்தின் சிறப்பு பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகர பழைய பேருந்து நிலையம் காளியம்மன் கோவில் தெருவில் உள்ள ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க அலுவலகத்தில், தமிழ்நாடு தெருவோர வியாபாரிகள் சங்கத்தின் மாநகர சங்க சிறப்பு பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் தெருவோர வியாபாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் தோழர் ப. சிவக்குமார் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளரும், ஏ.ஐ.டி.யூ.சி.யின் சட்ட ஆலோசகருமான வழக்கறிஞர் மு.அ. பாரதி முன்னிலை வகித்தார்.மாநில செயலாளர் தோழர் ஆர். தில்லைவனம், மாவட்டச் செயலாளர் ஆர்.பி. முத்துக்குமரன் ஆகியோர் சிறப்புரையாற்றி, தெருவோர வியாபாரிகளின் அன்றாட பிரச்சினைகள், வாழ்வாதாரப் பாதுகாப்பு, சட்டப்பூர்வ உரிமைகள் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்து பேசினர், தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில், கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம் தெருவோர வியாபாரிகளிடம் தினசரி ரூ.50 கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் தெருவோர வியாபார ஒழுங்குமுறை சட்டத்தின்படி, 1% சதவீதம் என ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே அதிகபட்சமாக ரூ.750 உரிமக் கட்டணமாக வசூலிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும், தினசரி கட்டண வசூலால் தெருவோர வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர், மேலும் வங்கிக் கடன் உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்கள் அனைத்து வியாபாரிகளுக்கும் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாநகர விற்பனைக் குழுவை உடனடியாக அமைத்து தெருவோர வியாபாரிகளின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இக்கூட்டத்தில் மாநகர தெருவோர வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் நேரு மார்க்கெட் எம். மணிகண்டன், காந்தி பூங்கா செயலாளர் வி. காமராஜ், பெரியகடைத் தெரு நிர்வாகி பப்பு என்ற முருகவேல், புதிய பேருந்து நிலைய நிர்வாகி பாலகிருஷ்ணன், மடத்துத் தெரு நிர்வாகி ரவி, பாலக்கரை நிர்வாகி பழனி, நேரு மார்க்கெட் நிர்வாகி ஏ. அடைக்கலசாமி உள்ளிட்ட தெருவோர வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இறுதியாக, மாவட்டக் குழு உறுப்பினர் கே. சரவணன் நன்றி கூறினார்.500-க்கும் மேற்பட்ட தெருவோர வியாபாரிகள் பங்கேற்ற இப்பேரவைக் கூட்டத்தில், வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாக்கவும், சட்டவிரோத கூடுதல் கட்டண வசூலுக்கு எதிராக தொடர் ஜனநாயக சட்ட வழி போராட்டங்களை முன்னெடுக்கவும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.செய்தியாளர் அ.மகேஷ்

Must Read