Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால்.. குறிஞ்சி பூக்களைப் பார்வையிட பொதுமக்களுக்குத் தடை

    July 26, 2026

    நந்தன் நிலேகனி தலைமையில் தேர்வு சீர்திருத்தங்களுக்கான உயர்மட்டக் குழு:

    July 26, 2026

    தூத்துக்குடி:

    July 26, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » கும்பகோணம் நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் டோக்கன் முறைகேடு புகார் – லாரி உரிமையாளர்கள் சங்கம் போராட்டம் அறிவிப்பு!
    மாவட்ட செய்திகள்

    கும்பகோணம் நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் டோக்கன் முறைகேடு புகார் – லாரி உரிமையாளர்கள் சங்கம் போராட்டம் அறிவிப்பு!

    SahabudeenBy SahabudeenJuly 21, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நெல் ஏற்றுதல், இறக்குதல் பணிகளில் ஈடுபட்டு வரும் லாரி உரிமையாளர்களுக்கு வரிசைமுறையில் டோக்கன் வழங்காமலும் முறைகேடு செய்வதாக புகார் எழுந்துள்ளது இதனால் லாரி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐசிசிடியூ (AICCTU) தொழிற்சங்கம் சார்பில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளனர்கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் அமைந்துள்ள (ஏஐசிசிடியூ) மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஏஐசிசிடியூ மாநில துணைத்தலைவரும், தஞ்சை மாவட்ட லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளருமான ஆர். மதியழகன் கூறியதாவது:தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நெல் ஏற்றுதல் மற்றும் இறக்குதல் பணிகளை லாரி உரிமையாளர்கள் அன்றாடம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், மண்டல மேலாளர்கள் சிலர் ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு, லாரி உரிமையாளர்களுக்கு வரிசைமுறையில் டோக்கன் வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்,இதனால் லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, தொழில் நலிவடைந்துள்ளதாக தெரிவித்தார்.மேலும், தஞ்சாவூர் மண்டலத்தில் நெல் ஏற்றுதல் மற்றும் இறக்குதல் பணிகளுக்காக கந்தசாமி & கோ நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து, அந்தப் பணிகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகமே நேரடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். தொடர்ந்து அவர் பேசுகையில்அனைத்து லாரிகளுக்கும் வரிசைமுறையில் டோக்கன் வழங்க வேண்டும். ஒப்பந்ததாரர்களுக்கு முன்னுரிமை அளிக்காமல், அனைத்து லாரிகளுக்கும் சமமான முறையில் டோக்கன் வழங்கப்பட வேண்டும். மேலும், டோக்கன் வழங்கும் போது நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் பொறுப்பு அதிகாரி (பி.ஓ.) முன்னிலையில் மட்டுமே டோக்கன் வழங்கும் நடைமுறையை உறுதி செய்ய வேண்டும் என்றார். மேலும்தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் பகுதிகளுக்கு வெவ்வேறு மாதிரியான தனித்தனி வாடகை நிர்ணயிக்கும் முறையை கைவிட்டு, தஞ்சாவூர் மண்டலம் முழுவதும் ஒரே மாதிரியான லாரி வாடகை நிர்ணயிக்க வேண்டும் என்றும், DPC-யில் இருந்து நெல் ஏற்றும் மற்றும் இறக்கும் இடங்கள் வரை உள்ள கிலோமீட்டர் தூர வேறுபாடுகளையும் முறைப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 30.06.2026 அன்று இது தொடர்பாக கும்பகோணம் வட்டாட்சியர் முன்னிலையில் சுமுகமான பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் குறிப்பிட்டு பேசினார், நுகர் பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டியுள்ளார். அதனைத் தொடர்ந்து மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 03.08.2026 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு கும்பகோணம் அடுத்த சாக்கோட்டை சாலையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலகம் முன்பு, ஏஐசிசிடியூ தொழிற்சங்கம் சார்பில் தஞ்சை மாவட்ட லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளார்.இந்தப் பிரச்சினையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக உயர் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, மண்டல மேலாளரை பணியிடமாற்றம் செய்து, லாரி உரிமையாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று ஆர். மதியழகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிகழ்வில் தஞ்சை மாவட்ட லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.செய்தியாளர் அ.மகேஷ்

    Post Views: 47
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால்.. குறிஞ்சி பூக்களைப் பார்வையிட பொதுமக்களுக்குத் தடை

    July 26, 2026

    தூத்துக்குடி:

    July 26, 2026

    தூத்துக்குடியில் 6 கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

    July 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (383)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.