Homeதமிழ்நாடுமாவட்ட செய்திகள்கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் திருக்கோவிலில் ஆடி 4-ஆம் வார வெள்ளியை முன்னிட்டு 1008 திருவிளக்கு பூஜை

கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் திருக்கோவிலில் ஆடி 4-ஆம் வார வெள்ளியை முன்னிட்டு 1008 திருவிளக்கு பூஜை

கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கும்பகோணம் மாநகரில் புகழ்பெற்ற அருள்மிகு மந்திரபீடேஸ்வரி மங்களாம்பிகை உடனாகிய ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயிலில், ஆடி மாதம் 4-ஆம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மாலை 1008 திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது.இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் இத்திருக்கோயிலில், கோயில் நிர்வாகத்தின் வழிகாட்டுதலுடன் திருவிளக்கு பூஜைக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பெண்களுக்கு டோக்கன் முறையில் 1008 திருவிளக்கு பூஜைகளுக்கு தேவையான பொருட்கள் தலா ஒவ்வொரு பெண்களுக்கும் சுமங்கலி பொருட்கள் கொடுக்கப்பட்டு ஒவ்வொரு பக்தருக்கும் ஒதுக்கப்பட்ட இடத்தில் வரிசையில் அமர வைத்து திருவிளக்குகள் வரிசையாக அமைக்கப்பட்டு பின்னர் பூஜை தொடங்கப்பட்டது, கோயில் வளாகம் முழுவதும் பெண்கள் அமர்ந்து, திருவிளக்குகளை ஏற்றி, அர்ச்சகர் மந்திரங்களை சொல்ல சொல்ல பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் மஞ்சள், குங்குமம், மலர்கள் உள்ளிட்ட பூஜைப் பொருள்களை வைத்து, திருவிளக்கிற்கு பூஜை செய்து மங்களாம்பிகை அம்மனை பயபக்தியுடன் ஆடி வெள்ளியில் வழிபட்டனர். மேலும் இந்து கலாச்சார முறைப்படி பெண்கள் விளக்கேற்றி வழிபடுவது நம் தொன்று தொட்ட வழிபாட்டு முறையாகும். விளக்கில் பிரம்மா, திருமால், சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் எழுந்தருளியிருப்பதாகவும், அதில் வெளிப்படும் ஜோதி அம்பிகையின் அருள்சக்தியாக விளங்குவதாகவும் ஐதீகம்.ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் குழுவாக இணைந்து திருவிளக்கு பூஜை செய்து வழிபடுவதால் குடும்ப நலம், ஆரோக்கியம், செல்வ வளம் மற்றும் ஆயுள் பலம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.1008 திருவிளக்குகளும் ஒரே நேரத்தில் ஏற்றப்பட்ட நிலையில், கோயில் வளாகம் முழுவதும் தீப ஒளியில் ஜொலித்தது. பெண்கள் பக்திப் பரவசத்துடன் அம்மனை வழிபட்டு, குடும்ப நலம், உலக நன்மை உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களை முன்வைத்து பிரார்த்தனை செய்தனர்.செய்தியாளர் அ. மகேஷ்

Must Read