தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், ஆடுதுறையில் சனிக்கிழமை, பேருந்து நிலையம் முதல் முருகன் கோயில் வரையிலான கும்பகோணம்–மயிலாடுதுறை சாலையோர மழைநீர் வடிகால் வாய்க்கால்களை ஆடுதுறை பேரூராட்சி மன்றப் பெருந்தலைவரும் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய பிரமுகருமான ம.க. ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மழைக்காலங்களில் மழைநீர் தேங்காமல் சீராகச் செல்வதற்கான வடிகால் வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அவர், வாய்க்கால்களில் உள்ள அடைப்புகளை அகற்றி, தேவையான இடங்களில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் பேரூராட்சி அலுவலர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தினார்.ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.செய்தியாளர் அ.மகேஷ்
